SJ Surya: தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் என அழைக்கப்பட்டு வரும் எஸ் ஜே சூர்யா சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்தது குறித்து கூறியிருக்கும் ஒரு தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் பதித்தவர் எஸ் ஜே சூர்யா. முதல் படத்திலேயே அஜித் மற்றும் இரண்டாம் படத்தில் விஜய் என கோலிவுட்டின் இரண்டு பிரம்மாண்டங்களை வைத்து இயக்கி இரண்டிலுமே மிகப்பெரிய வெற்றியை கண்டவர். பின்னர் நியூ படம் மூலம் நடிகராக எண்ட்ரி கொடுத்தார்.
Also Read
இதையும் படிங்க; நிகழ்ச்சி முடிந்ததும் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜோசியர் இப்படி சொல்லிட்டாரே!…
தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நடிப்பில் திசை திருப்பியவர் தற்போது மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் அவரின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் எஸ் ஜே சூர்யாவை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு அதீத ஆர்வம் காட்டி வந்தனர்.

கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அப்படக்குழுவை அவருக்கு நடிப்பு அரக்கன் என பெயரையும் கொடுத்தது.
இதையும் படிங்க; மாமனாருக்கு மட்டும் காரு! மருமகனுக்கு இதானா? தனுஷுக்கு கலாநிதிமாறன் கொடுத்த கிஃப்ட்
அதில் தான் முக்கிய சண்டை காட்சிகளும் பாடல் காட்சிகளும் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் படத்தின் பட்ஜெட்டில் பெரிய அளவை செட்களுக்கே பயன்படுத்தி இருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது எஸ் ஜே சூர்யா நானி நடிப்பில் வெளியாக இருக்கும் சரிபோதா சனிவரம் படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



