Connect with us
vijay ajith

Cinema News

விஜயோட மொபைல் காலர் டியூனே அஜித்தோட பாட்டுதான்!.. அட அவரே சொல்லிட்டாரே!..

Ajith vijay: எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் வரிசையில் திரைத்துறையில் போட்டி நடிகர்களாக பார்க்கப்படுபவர்கள்தான் விஜய் – அஜித். துவக்கத்தில் அஜித் – விஜய் என எழுதிய பத்திரிக்கைகள் ஒரு கட்டத்தில் விஜய் – அஜித் என மாற்றி எழுதினார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு விஜயின் வளர்ச்சி இருந்தது.

இருவருமே சமகாலத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து பின்னால் ஆக்சன் ஹீரோவாக மாறியவர்கள். ஒருகட்டத்தில் இருவருமே மாஸ் ஹீரோவாக மாறினார்கள். விஜயும், அஜித்தும் வளரும் நேரத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ என்கிற படத்தில் இணைந்தும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: சமந்தா செஞ்ச அதே மேட்டரை செய்யும் சோபிதா… இப்போ சைதன்யா என்ன செய்வாரு?

அந்த ஒருபடம்தான். அதன்பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஒருகட்டத்தில் சினிமாவில் இருவரும் மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஒருவரை ஒருவர் திட்டியும் வசனம் பேசிக்கொண்டனர். திருமலை படத்தில் ‘எவன்டா உங்க தல’ என சீறினார் விஜய். அட்டகாசம் படத்தில் ‘இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன’ என பாட்டு வைத்தார் அஜித்.

ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பக்குவம் வந்துவிட அதை விட்டுவிட்டார்கள். ஆனால், அவர்களின் ரசிகர்கள் சண்டை போடுவது நிறுத்தவில்லை. டிவிட்டரில் ஹேஷ்டேக்குகள் மூலம் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இதை சீரியஸாக விஜய் – அஜித் இருவருமே கண்டிக்கவும் இல்லை.

dhamu copy

dhamu copy

ஆனால், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோட் சூட் அணிந்து வந்த விஜய் ‘நண்பர் அஜித் மாதிரி’ என சொல்லி பலரையும் ஆச்சர்யப்படுத்தினார். மேலும், வாரிசு படம் வெளியான அதே தேதியில் துணிவு படமும் ரிலீஸ் என தெரிந்தபோது ‘வரட்டும்பா.. அவர் நம்ப நண்பர்தான்’ என சொன்னார் விஜய்.

அஜித்தின் தந்தை இறந்தபோது அவரின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் விஜய். இந்நிலையில், விஜயுடன் பல படங்களில் நடித்தவரும், அவரின் நண்பருமான நடிகர் தாமு ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜய் அஜித்தின் பயங்கர ரசிகர். அது பலருக்கும் தெரியாது. அஜித்தை அவர் ரொம்ப ரசிப்பார். அஜித்தின் பில்லா படத்தில் வந்த பாடல் ஒன்றைத்தான் விஜய் பல நாட்களாக தனது மொபைலில் காலர் ட்யூனாக வைத்திருந்தார்’ என சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: மாமனாருக்கு மட்டும் காரு! மருமகனுக்கு இதானா? தனுஷுக்கு கலாநிதிமாறன் கொடுத்த கிஃப்ட்

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top