Kamalhassan: உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய கேரியரில் எப்போதுமே உச்சத்தில் தான் இருப்பார் என்பதை சமீபத்திய விஷயம் தற்போது சான்றாகி இருக்கிறது. இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கோலிவுட்டில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் உச்ச நட்சத்திரங்கள் என கேள்வி எழும்போது கமல், ரஜினி, விஜய், அஜித்தை தான் பலரும் கை காட்டுவார்கள். ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என அடையாளம் படுத்தினாலும் அவருக்கு முன்னாலே கோலிவுட்டில் நடிகராக கால் பதித்தவர் கமல்ஹாசன்.
இதையும் படிங்க: கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?
இன்று கோலிவுட்டின் பல புதிய உத்திகளுக்கு காரணமானவரும் அவர்தான். நடுவில் தன்னுடைய காரியங்களில் சற்று சறுக்கலை சந்தித்த கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் மூலம் அதை மீண்டும் மீட்டெடுத்தார். ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 ரசிகர்களிடம் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தும் கமல்ஹாசனின் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்கள் அவர் இந்தியன் 3ல் இதை சரி செய்து விடுவார் எனவே நம்புகின்றனர். இந்நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பரியேறும்பெருமாள் ரிலீசுக்குப் பிறகு மாரி செல்வராஜ் செய்த தரமான சம்பவம்… அப்படி ஒரு கஷ்டகாலமாம்!
இதைத்தொடர்ந்து அடுத்த இடத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன் வெளிநாட்டு விற்பனை 40 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது. இருந்தும் தக்லைஃப் திரைப்படத்தை விட கோட் திரைப்படத்தின் வசூல் அதிகமாக கிடைக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.