Connect with us

Cinema News

ஓடிடியில் மாஸ் காட்டிய ஹார்ட் பீட்… கடைசியில் இப்படி பண்ணிட்டீங்களே? சோகத்தில் ரசிகர்கள்…

Heart Beat: ஓடிடியில் சமீப காலமாக ட்ரெண்ட் வெப் சீரிஸாக ஒளிபரப்பாகி வந்த ஹார்ட் பீட் தொடரின் ரசிகர்களுக்கு இந்த வாரம் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களின் பெரிய பொழுதுபோக்கு தியேட்டர் தான் என்று இருந்தது. ஆனால் தற்போதைய காலத்தில் சினிமா பார்ப்பதை விட வெப் சீரிஸுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகி வந்தது ஹார்ட் பீட் தொடர்.

இதையும் படிங்க: அந்த தேதில ரிலீஸ் பண்ணி எதுக்கு பல்ப் வாங்கணும்… அக்டோபர் ரேஸில் இருந்து பின்வாங்கிய சூர்யா!..

ரீனா என்னும் டாக்டர் தன்னுடைய தாய் ரதியைத் தேடி ஆர்கே ஹாஸ்பிடலில் இணைகிறார். அங்கு அவருடன் நவீன், ராக்கி, தேஜூ உள்ளிட்ட டாக்டர்கள் நண்பர்களாக மாறுகின்றனர். ரீனாவிற்கு அந்த ஹாஸ்பிடல் எம்டி அர்ஜுனுடன் காதல் ஏற்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அர்ஜுன் ரதியின் தாய் தான் என்ற ரகசியத்தை பொதுவெளியில் போட்டு உடைத்தார்.

#image_title

 அப்போதே ரசிகர்கள் சீரிஸ் கிளைமாக்ஸ் நோக்கி செல்வதாக கவலை கொண்டனர். இந்நிலையில் இந்த வாரம் ரதி மற்றும் ரீனாவின் விஷயம் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளது. ரீனாவை ஹாஸ்பிடல் விட்டு போக ரதி கூறுகிறார். அவர் முடிவு எடுத்து ரயில் நிலையம் வரையும் சென்று விடுகிறார்.

இதையும் படிங்க: அடுத்த கனவுக்கன்னியும் போச்சா… இளசுகளின் மனசை உடைத்த மேகா ஆகாஷ்…

 இந்நிலையில் அடுத்த சீசன் 2025 ஆண்டுதான் தொடங்கும் என இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டாரில் மிகவும் பிரபலமான இத்தொடர் முடிந்தது ரசிகர்களுக்கு கவலையாகி இருக்கிறது. அடுத்த வாரத்தில் இருந்து கனா காணும் காலங்கள் சீசன் மூன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top