
latest news
இந்த வாரமும் போச்சா.. சன் டிவியிடம் தோற்ற சிறகடிக்க ஆசை… யார் அப்போ ஃபர்ஸ்டு?
Published on
By
TRP: சின்னத்திரை சீரியல்களில் இந்த வாரமும் டிஆர்பியில் சன் டிவியே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மீண்டும் விஜய் டிவி தோல்வியை தழுவி இருக்கிறது.
ஒவ்வொரு வார இறுதியிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாக சீரியல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் கொடுக்கப்படும். அதில் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட சீரியலுக்கு முதலிடம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முன்பெல்லாம் தனியாக ஆதிக்கம் செலுத்தி வந்த சன் டிவிக்கு சில வருடங்களாகவே விஜய் டிவி சரியான போட்டியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?
இருந்தும் கடந்த சில வாரங்களாக விஜய் டிவியையும் பின்னுக்கு தள்ளி சன் டிவியே முன்னிலை வைத்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரமும் சிங்க பெண்ணே சீரியல் 9.13 புள்ளிகளை பெற்று டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் விஜய் டிவியின் ஒற்றை சீரியலான சிறகடிக்க ஆசை கடந்த வாரத்தில் இருந்து முன்னேறி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது.
#image_title
8.76 புள்ளிகளைப் பெற்று இருக்கிறது. சைத்ரா நடிக்கும் கயல் சீரியல் 8.68 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் நான்காம் இடத்தில் சன் டிவியில் கடந்த வாரம் முடிந்த வானத்தைப்போல சீரியல் இடம் பிடித்துள்ளது. பல மாதங்களாக ஒளிபரப்பான இச்சீரியல் கிளைமாக்ஸில் விறுவிறுப்பு கூடி 8.23 புள்ளிகளைப் பெற்று நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இப்படி போர் அடிச்சிருக்க கூடாது… கொட்டுக்காளி படத்தில் சூரி மட்டும்தான்… ட்விட்டர் விமர்சனம்
ஐந்தாவது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியலும், ஆறாவது இடத்தில் மல்லி சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியல்கள் முறையே 8.03 மற்றும் 7.45 புள்ளிகளை டிஆர்பியில் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் டிவி தன்னுடைய ஒற்றை சீரியலை வைத்து சன் டிவியுடன் மோதிவருவது குறிப்பிடத்தக்கது.
சன்டிவிக்கு சரியாக போட்டியாக இருந்தாலும் சிறகடிக்க ஆசை தொடர் தன்னுடைய ரியல் டிராக்கை தாண்டி செல்வதால் சில வாரம் அதனால் தொடர்ச்சியாக முதலிடத்தினை பிடிக்க முடியாமல் போவதும் குறிப்பிடத்தக்கது.
TVK Vijay: நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த 27ம் தேதி பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க கூடிய மக்கள் கூட்டத்தில்...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...