Connect with us
vetri

Cinema News

‘அசுரன்’ படத்திற்காக மாரி செஞ்சத மறக்கவே முடியாது.. வெற்றிமாறன் நெகிழ்ச்சி..

Asuran Movie: தமிழ் திரையுலகில் பாலச்சந்தர், பாரதிராஜா, கே எஸ் ரவிக்குமார் இவர்களுக்கு அடுத்தபடியாக பெரும் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர்களாக திகழ்ந்து வருபவர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ,பா. ரஞ்சித் போன்றவர்கள்தான் .அதிலும் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் குறிப்பிட்ட ஒரு ஜாதியை மையப்படுத்திய படங்களை எடுத்து வருகிறார்கள்.

பொதுவாக சமுதாயத்தில் நடக்கும் அவலங்கள். அந்த அவலங்களை தட்டிக் கேட்கும் ஒரு ஹீரோ என்ற வகையில் படங்களை எடுத்து வருகிறார் வெற்றிமாறன். இந்த நிலையில் அவர் எடுத்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும் தனுஷுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.

இதையும் படிங்க: பிக்பாஸ் கூப்பிட்டாங்க,, முடியாதுனு சொல்லிட்டேன்.. குக் வித் கோமாளி பிரபலம் கொடுத்த ஷாக்…

வெற்றிமாறனே எழுதி இயக்கிய அசுரன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருப்பார். தமிழில் முதன்முதலில் அறிமுகமான திரைப்படம் அசுரன் திரைப்படம் தான். படத்தை எஸ் தானு தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஏற்கனவே தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்கள் அனைத்துமே வெற்றிகளை குவித்தது. அந்த வெற்றி வரிசையில் அசுரன் திரைப்படமும் அமைந்தது இன்னும் கூடுதல் மகுடம் கொடுத்ததைப் போல இருந்தது. மேலும் இந்த படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி பல புகழைப் பெற்ற அசுரன் திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் வெற்றிமாறன் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: மீண்டும் டைரக்‌ஷனில் களமிறங்கும் தனுஷ்… ஆனா இது நடக்கிறதுக்கான காரணமே வேறயாம்…

இந்த படத்தின் கிளைமாக்ஸில் ஒரு வரி வரும். ‘நீ படிச்சு மேல வா.. அவங்க உனக்கு பண்ணத நீ யாருக்கும் பண்ணாத’ என தனுஷ் கூறுவது போல ஒரு வசனம் நான் எழுதியிருப்பேன். அப்போது தனுஷ் லண்டனில் இருந்தார். ஜகமே தந்திரம் படத்திற்காக லண்டன் படப்பிடிப்பில் தனுஷ் அங்கு இருந்தார். நான் அசுரன் திரைப்படத்தின் டப்பிங்கிற்காக இருந்தேன்.

சென்னைக்கு எப்படியாவது தனுஷ் வரவேண்டும் அல்லது நான் லண்டன் போக வேண்டும். இரண்டுமே நடக்காத காரியம். அந்த சமயத்தில் தான் கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மாரி பிஸியாக இருந்தார். அப்போது மாரி நான் வேண்டுமென்றால் லண்டன் சென்று டப்பிங் முடித்து விடுகிறேன் என கூறினார். அதைப்போல மாரியும் அங்கு சென்று டப்பிங்கை நடத்த நான் இங்கிருந்து whatsapp காலில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கரெக்ஷன் செய்து கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க: கட்சிக் கொடி அறிமுக விழாவில் குடும்பத்தை அழைக்காத விஜய்! இதுதான் காரணமா?

அங்கு லண்டனில் டப்பிங் இன்ஜினியர் நாங்கள் செய்வதை எல்லாம் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார். இன்னும் நான்கு நாட்களில் படம் ரிலீஸ். கடைசி ஸ்டேஜ் வரைக்கும் நாங்கள் டப்பிங்கில் இருந்ததை பார்த்து என்னங்கடா இவங்க என அந்த டப்பிங் இன்ஜினியர் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் தனுஷ் ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு இரவு முழுவதும் டப்பிங்கிலும் வந்து கலந்து கொள்வார். இதை எல்லாம் அந்த டப்பிங் இன்ஜினியர் மிகவும் ஆச்சரியமாக பார்த்தார் என வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறினார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top