வசூலை அள்ளும் வாழை, டிமான்ட்டி காலனி 2…. 4 நாள் வசூல் இவ்வளவு கோடியா?….

Published on: August 27, 2024
vd2
---Advertisement---

இன்றைக்கு தமிழ்சினிமா உலகில் மிகப்பெரிய சாதனை செய்தவர்கள் இரு இயக்குனர்கள். அவர்களில் முதல் சாதனையாளர் மாரி செல்வராஜ். அவர் வாழை என்ற பெயரிலே தன்னோட வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலையும் இந்தப் படம் வாரிக்குவித்துக் கொண்டு இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திரங்கள் அந்தப் படத்தில் இல்லை. அந்தப் படத்தைப் பொருத்தவரை அந்தப் படத்தின் முகம் என்றால் அது மாரிசெல்வராஜ் மட்டும் தான்.

அப்படிப்பட்ட நிலையில் அந்தப் படம் இப்படிப்பட்ட வசூலை செய்ததுன்னா அதுக்குப் பின்னாடி இருக்கிற படைப்பாளி மாரி செல்வராஜ் மட்டும் தான். இன்றைக்குத் திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைப்பது கஷ்டமாக இருக்கு என்ற சூழ்நிலையில் இந்தப் படம் இப்படி ஒரு வசூலை செய்து கொண்டு இருப்பது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அந்தளவு மகிழ்ச்சியை தந்து இருக்கிறது.

mariselvaraj
mariselvaraj

இதுபோன்ற படைப்போட வெற்றி உண்மையான தமிழ்சினிமாவின் வெற்றி. அதனால் தான் இந்தப் படத்தை அந்தளவுக்கு எல்லோரும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். 3வது நாளில் வாழை 4 கோடியையும் மொத்தமாக 7.65 கோடியையும் சுருட்டியுள்ளது. நாலாவது நாளில் இரண்டரை கோடியை வசூலித்துள்ளது.

அதைப்போல இன்னொரு சாதனையாளர் அஜய் ஞானமுத்து. மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ள படங்கள் என்ன வசூல் செய்யுமோ அதை விட அதிகமான வசூலை செய்திருக்கிறது டிமான்டி காலனி 2. அருள்நிதி நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

Also read: ‘அசுரன்’ படத்திற்காக மாரி செஞ்சத மறக்கவே முடியாது.. வெற்றிமாறன் நெகிழ்ச்சி..

அருள்நிதியின் திரைப்பயணத்தில் மிக அதிகமான வசூலை அள்ளிய படமாக இது அமையும் என்று தான் இன்று எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் அஜய் ஞானமுத்து கமர்ஷியல் பாதையில் பயணிப்பவர்.

மாரிசெல்வராஜ் வித்தியாசமான படைப்பாளி. இந்த ரெண்டு பேரின் வெற்றியும் இன்றைக்குத் திரையுலகிலே ஒரு புத்துணர்வை ஊட்டி இருக்கிறது என்பது தான் உண்மை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.