Connect with us
bigili

Cinema News

நடிகர் பிஜிலி ரமேஷ் திடீர் மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்….

bigili ramesh: சினிமாவில் பல வருடங்கள் இருப்பவர்களுக்கே சரியான வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால், இப்போதெல்லாம் சினிமாவுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்களுக்கும் கூட சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அதற்கு காரணம் சமூகவலைத்தளங்கள்தான். அதனால்தான் டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கூட சினிமாவில் நடித்து வருகிறார்.

அவர் மட்டுமல்ல.. டிவி மூலம் பிரபலமான அறந்தநாங்கி நிஷா, விஜய் டிவி புகழ், பாலா என பலரையும் இப்படி சொல்லலாம். சென்னையை சேர்ந்த பிஜிலி ரமேஷ் அடிப்படையில் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். ஒரு யுடியூப் நிகழ்ச்சிக்காக தெருவில் போய்க்கொண்டிருந்த அவரிடம் சிலர் ஃபிராங்க் செய்ய அந்த வீடியோ வைரலானது.

அதன் மூலம் அவர் பலருக்கும் பிரபலமானார். அதுவும், பாபா ரஜினியை போல போஸ் கொடுத்து விரல்களை காட்டி அவர் செய்த மேனரிசம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டது. எனவே, அவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.

bigili

#image_title

எல்லாமே சின்ன சின்ன படங்கள்தான். ஹீரோவின் நண்பர் கூட்டத்தில் இவரும் இருப்பார். சின்ன சின்ன வசனங்கள் கிடைக்கும். பிஜிலி ரமேஷுக்கு மதுப்பழக்கம் உண்டு. தொடர்ந்து மது அருந்தி வந்ததால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அவரால் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க முடியவில்லை.

இதனால், வாய்ப்புகளும் நின்று போனது. சில நாட்களுக்கு முன்பு ‘குடியால் என் வாழ்க்கை போய்விட்டது. இப்போது திருந்துவிட்டேன். சினிமாவில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நடிப்பேன். சம்பளம் மட்டும் கொடுத்தால் போதும்’ என பேசி வீடியோ வெளியிட்டார். கடந்த சில மாதங்களாகவே அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு யாரும் உதவியும் செய்யவில்லை.

இந்நிலையில்தான், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் மரணமடைந்தார். இன்று மாலை 5 மணியளவில் அவரின் இறுதிச்சடங்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘அசுரன்’ படத்திற்காக மாரி செஞ்சத மறக்கவே முடியாது.. வெற்றிமாறன் நெகிழ்ச்சி..

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top