கண்ணியத்தை தவறவிட்ட சிவகார்த்திகேயன்.. அவர் பண்ண பெரிய தவறு! வெளுத்து வாங்கிய பிரபலம்

Published on: August 27, 2024
siva 1
---Advertisement---

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக தயாரிப்பாளராக பாடல் ஆசிரியராக என பன்முகத் திறமைகள் கொண்ட ஒரு அற்புதக் கலைஞராக இந்த சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரது தயாரிப்பில் வெளியான  திரைப்படம் கொட்டுக்காளி.

பெர்லின் சர்வதேச திரைப்பட விருதில் பல விருதுகளைப் பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகி வரவேற்பை பெற்றதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தைப் பற்றி சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான அமீர் கூறியது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

இதையும் படிங்க: சிம்பு, திரிஷா திருமணம் செய்யாததற்கு இது தான் காரணமா? அடக்கடவுளே…

கொட்டுக்காளி திரைப்படத்தை ஒருவேளை நான் தயாரித்து இருந்தால் அந்தப் படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்திருக்க மாட்டேன். பெர்லின் சர்வதேச திரைப்பட விருதில் பல விருதை பெற்ற திரைப்படம் கொட்டுக்காளி. அந்தக் கண்ணியத்தை அப்படியே கொடுத்திருக்க வேண்டும்.அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயன் அந்தப் படத்தை ஓடிடியில் விற்றிருக்க வேண்டும்.

வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க கூடாது. அது அவசியமற்றது.  சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஃப்ளூயன்சை பயன்படுத்தி அதை ஓடிடியில் விற்றிருக்க வேண்டும். அதோடு போட்ட முதலீட்டை எடுத்து விட்டு பிரச்சினையை முடித்து இருந்தால் தேவைப்படுவோர் அந்தப் படத்தை போய் ஓடிடியில் பார்த்திருப்பார்கள்.

இதையும் படிங்க: வசூலை அள்ளும் வாழை, டிமான்ட்டி காலனி 2…. 4 நாள் வசூல் இவ்வளவு கோடியா?….

கொட்டுக்காளி திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் இது ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம் தான். வாழைப் படத்தை எடுத்துக் கொண்டால் அது ஒரு மெயின் ஸ்ட்ரீம் திரைப்படம். அதனால் தான் வாழை திரைப்படத்தால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் கொட்டுக்காளி திரைப்படம் ஃபெஸ்டிவலுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படம்.

ameer
ameer

அதை கொண்டு போய் மெய்ன் ஸ்ட்ரீம் திரைப்படத்தோடு வலுக்கட்டாயமாக திணிப்பதும் ஒரு வன்முறை தான் என அமீர் கூறி இருக்கிறார். மேலும் ஃபெஸ்டிவல் திரைப்படம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படத்தை எடுத்து மெய்ன் ஸ்ட்ரீமுக்கு கொண்டு வந்து ஆடியன்ஸ் என் படத்தை பார்க்க மாட்டேன் என  சொல்கிறார்கள் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல என அமீர் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ‘அசுரன்’ படத்திற்காக மாரி செஞ்சத மறக்கவே முடியாது.. வெற்றிமாறன் நெகிழ்ச்சி..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.