குஷி படத்தை பற்றி பேசி வசமா மாட்டிக்கிட்ட பிரியங்கா மோகன்! கோலிவுட்டில் இனி அவ்ளோதான்

Published on: August 27, 2024
priyannka
---Advertisement---

Priyanka Mohan: திரைத்துறையில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் டாக்டர் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் உடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். டாக்டர் திரைப்படம் தான் பிரியங்கா மோகனுக்கு முதல் தமிழ் திரைப்படம். இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலமும் மிகவும் பிரபலமானார்.

நடித்த ஒரு சில படங்களிலேயே இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.  அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் மீண்டும் டான் படத்தில் இணைந்தார். தமிழில் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத்தர அதன் பிறகு தனுசுடன் இணைந்து கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் இணைந்து நடித்தார்.

இதையும் படிங்க: மொத்தமா கலைச்சி விட்டாச்சுல… புறநானாறு படத்தில் இத்தனை மாற்றமா?

சமீபத்தில் கூட தனுஷ் இயக்கும்  ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் கூட ஒரு கேமியோ ரோலில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் பிரியங்கா மோகன். தற்போது பிரியங்கா மோகன் தெலுங்கில் நாணியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன .

சமீபத்தில் ஹைதராபாத்தில் அதற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு கலந்து கொண்ட போது பிரியங்கா மோகன் மேடையில் பேசிய ஒரு பேச்சு பெரும் வைரலானது. இந்த படத்தில் நானி,பிரியங்கா மோகன் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த பிரமோஷனில் எஸ் ஜே சூர்யாவும் கலந்து கொண்டார் .

இதையும் படிங்க: தொலஞ்சி போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிடுச்சி போல!.. ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்!..

அப்போது மேடையில் பேசிய பிரியங்கா மோகன் எஸ் ஜே சூர்யாவை பார்த்து  ‘அனைவரின் சார்பாக நான் ஒரு கேள்வி கேட்கிறேன். மறுபடியும் நீங்கள் எப்போது இயக்குனராக மாறப் போகிறீர்கள்? அதுவும் குஷி 2 படத்தை எடுக்க வேண்டும். அந்த படத்தை பவன் கல்யாணை வைத்து எடுக்க வேண்டும். அது ஒரு கிளாசிக் திரைப்படமாக அமையும்’ என கூறியிருக்கிறார் பிரியங்கா மோகன்.

இதை கேட்டதும் எஸ் ஜே சூர்யா வெட்கத்தில் சிரித்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கோலிவுட்டுக்கு தகுதி இல்லாத ஒரு நடிகை பிரியங்கா மோகன் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் தமிழில் விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த படம் குஷி.

தெலுங்கில் அதில் பவன் கல்யாண் நடித்திருந்தார். குஷி 2 ஒரு வேளை எடுப்பதாக இருந்தால் தமிழ் நடிகர்கள் பெயரை பிரியங்கா மோகன் சொல்லி இருக்கலாம். ஆனால் பவன் கல்யாண் பெயரை சொன்னதால் தமிழ் ரசிகர்கள் அவர் மேல் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: அஜித்தின் அடுத்த படம் மங்காத்தா2 வா? வெங்கட் பிரபுவே சொல்லிட்டாரே!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.