Cinema News
நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பியும் ரிப்ளே வரல.. உருக்கமாக பேசிய பிஜிலி ரமேஷின் மகன்
Bijili Ramash: தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். இன்று அவர் உடல்நிலை சரியில்லாமல் அதிகாலை மரணம் அடைந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இன்று மாலை 5 மணி அளவில் அவரின் இறுதிச்சடங்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற இருக்கிறது.
அவரின் மரணத்திற்கு திரையுலகை சார்ந்த குறிப்பிட்ட சில நண்பர்கள் மட்டும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதுவுக்கு அடிமையான பிஜிலி ரமேஷ் சில காலமாக உடல் நலம் சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு கிடந்தார். அவர் மனைவி கூறும் போது ஒன்பது மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.
இதையும் படிங்க: இளம் நடிகைகளை வேட்டையாடும் நடிகர்கள்… தங்கர்பச்சான், பாரதிராஜா செய்தது என்ன?
ஸ்டான்லி மருத்துவமனையில் தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு முன்னாடி பல நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று நல்ல முறையில் வீடு திரும்பினார். ஆனால் இந்த கடைசி 23 நாட்கள் மருத்துவமனையில் தான் இருந்தார். அவரால் சரியாக கூட சாப்பிட முடியவில்லை. அவருக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் இரண்டு நாட்கள் மூச்சுத் திணறால் அவதிப்பட்டார் .
அதன் பிறகு அவர் எங்களை விட்டு பிரிந்தார் என அவர் மனைவி கூறினார். அதுமட்டுமில்லாமல் தனது உடல் நலம் மிக மோசமாக இருப்பதை அறிந்த பிஜிலி ரமேஷ் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ மூலம் திரை பிரபலங்களிடம் உதவியை நாடினார் .நான் திருந்தி விட்டேன். இனிமேல் குடிக்க மாட்டேன். எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்றெல்லாம் கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: சொன்னது எல்லாமே பொய்!.. பிக்பாஸிலிருந்து கமல் விலக காரணமே இதுதானாம்
அவருக்கு வி ஜே சித்து தேவையான உதவிகளை செய்து வந்ததாக பிஜிலி ரமேஷின் மகன் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தீவிர ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷின் கடைசி ஆசை என்ன என்பதை பற்றியும் பிஜிலி ரமேஷின் மகன் கூறியிருக்கிறார். ரஜினியுடன் ஒரு படத்திலாவது எப்படியாவது நடித்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தாராம்.
அதனாலேயே ஜெயிலர் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நெல்சனுக்கு கூட மெசேஜ் அனுப்பி இருந்தார்களாம். ஆனால் நெல்சன் அதற்கு ரிப்ளே பண்ணவே இல்லையாம். அவருடைய ஆசையும் நிராசையாக போய்விட்டது என பிஜிலி ரமேஷின் மகன் உருக்கமாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: குஷி படத்தை பற்றி பேசி வசமா மாட்டிக்கிட்ட பிரியங்கா மோகன்! கோலிவுட்டில் இனி அவ்ளோதான்