Vaazhai: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவிலான பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், இந்த ஒரு படத்தால் கோடி கணக்கில் மாரி செல்வராஜிக்கு லாபம் கிடைத்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
மாரி செல்வராஜ் எழுதி, இயக்கி இணைந்து தயாரித்த திரைப்படம் வாழை. இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். கடந்த வார இறுதியில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடம் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: தொலஞ்சி போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிடுச்சி போல!.. ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்!..
இப்படத்தை மாரி செல்வராஜ் தன்னுடைய மனைவி திவ்யா மாரி செல்வராஜ் உடன் அவர்களின் சொந்த நிறுவனமான நவ்வி ஸ்டுடியோஸ் மூலம் இணைந்து தயாரித்துள்ளனர். நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹாட்ஸ்டார் மற்றும் ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன் நிறுவனமும் இப்படத்தை தயாரித்து வந்தது.

முதலில் இந்த படத்தை தயாரிக்க இருந்தது ஹாட்ஸ்டார் நிறுவனம் தான். அந்த நிறுவனத்திற்காக தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வாழை திரைப்படத்தை பதினாறு கோடிக்கு இயக்கி தருவதாக மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தாராம். ஆனால் இப்படத்தின் மொத்த பட்ஜெட்டும் ஆறு கோடிக்குள் முடிந்திருக்கிறது.
இதையும் படிங்க: மொத்தமா கலைச்சி விட்டாச்சுல… புறநானாறு படத்தில் இத்தனை மாற்றமா?
இதனால் ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 10 கோடி மாரி செல்வராஜின் முதல் லாபம். பின்னர் இப்படம் நேரடியாக ஓடிடியில் தான் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் உள்ளே வந்த பின் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.
முதல் நாளிலிருந்து படத்திற்கு அமோக ஆதரவு கிடைப்பதால் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நவ்வி ஸ்டுடியோஸின் பங்கு மட்டுமே 10 கோடி தாண்டும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஒற்றை படத்தில் 20 கோடியை மாரி செல்வராஜ் லாபமாக எடுத்துவிட்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.
