Connect with us
surya

Cinema News

சூர்யா 44 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

Surya 44: தமிழ் திரையுலகில் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். சூர்யா44 படத்தை 2டி நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

இந்த படத்தின் மீது திரை உலக்கினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் பேட்ட,  போன்ற தரமான படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: எவ்ளோ பிரச்சினை வந்தாலும் சமந்தா மாதிரி இருங்கப்பா.. வைரலாகும் வீடியோ

கண்டிப்பாக இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சூர்யா 44 படத்தில் பிரபல நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு நடனமாட போவதாக ஒரு செய்தி என்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அந்த நடிகை வேறு யாருமில்லை ஸ்ரேயா சரண். தமிழில் ரஜினி, விஜய், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட ஸ்ரேயா அந்த நேரத்தில் மிகவும் பேசப்பட்ட நடிகையாக திகழ்ந்து வந்தார் .இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும் இருக்கிறார்.

இதையும் படிங்க: இதுவரை வந்ததிலே இதுதான் செம ஹாட்டு!.. தர லோக்கலா இறங்கி காட்டும் ஆண்ட்ரியா!…

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து வந்த ஸ்ரேயா ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவின் 44 படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட போவதாக சொல்லப்படுகிறது.

எப்படி சமந்தாவுக்கு புஷ்பா 2 படம் ஒரு பெரிய கம்பேக் கொடுத்ததோ அதேபோல ஸ்ரேயாவுக்கும் இந்த படம் ஒரு சரியான கம்பேக்காக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக முன்னணி நடிகைகள் பெரும்பாலும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை டிரெண்டிங்காக மாற்றி வருகின்றனர்.

shriya

shriya

இதையும் படிங்க: தேர்தலுக்குப் பிறகு விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கா? அதுதான் அவரோட பிளானா?

ஒரு முழு படத்தில் நடித்து கிடைக்காத அங்கீகாரம் ஒரு பாடலுக்கு ஆடுவதில் கிடைத்து விடுகிறது. அதற்கு ஒரு உதாரணமாக இருப்பவர்கள் நடிகை சமந்தா மற்றும் தமன்னா. ஊ சொல்றீயா மாமா பாடல் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. அதையெல்லாம் தவிடு பொடியாக்கிய பாடலாக காவாலா பாடல் மாறியது. அந்த வகையில் ஸ்ரேயாவும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top