கமலிடம் டெல்லிகணேஷ் சொன்ன வார்த்தை… அப்படியே அலேக்கா திருப்பி விட்ட உலகநாயகன்

Published on: August 28, 2024
dgkl
---Advertisement---

கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி, புன்னகை மன்னன், இந்தியன் 2 என பல படங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். இவர் நகைச்சுவை, குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் பின்னிப் பெடல் எடுப்பார்.

கமலுடன் இவர் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் இவர் வரும் சீன்களில் கமலும் இணைந்து பண்ணும் ரகளை விழுந்து விழுந்து சிரிக்கலாம். அவ்வளவு சூப்பராக இருக்கும். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம். அதே போல தான் அவ்வை சண்முகியும்.

கமல் உடன் நடிக்கும்போது தன்னோட கதாபாத்திரம் வெளியே தெரிகிறது. அது ரஜினியுடன் நடித்தால் அந்தளவுக்கு தெரியாது. அங்கு ரஜினி மட்டும் தான் தெரிவார் என்றும் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார். கமலுடன் எப்படி முதல் சந்திப்பு என்ற கேள்விக்கு இப்படி பதில் அளித்துள்ளார் டெல்லி கணேஷ்.

கமலின் 100வது படம் ராஜபார்வை. நான் அதுல நடிச்சேன். நான் காலையிலேயே மேக்கப் எல்லாம் போட்டு ரெடியா இருந்தேன். கமல் வந்தாரு. நான் எழுந்து வணக்கம் சொல்லிட்டு ‘சார் ஐ யாம் யுவர் ஃபேன்’னு சொன்னேன். இதான் முதல்லன்னு சொன்னேன். அதுக்கு அவர் சொன்னாரு.

Avvai shunmugi
Avvai shunmugi

‘ஐ யாம் யுவர் ஃபேன்’. அதான் கெமிஸ்ட்ரி. அங்கே ஒர்க் அவுட் ஆனது தான் அது. அங்கே இருந்து ரொம்ப பிடிச்சிப் போய் எல்லாப் படத்துலயும் நடிக்க ஆரம்பிச்சேன். அவருக்கும் என் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.

மைக்கேல் மதன காமராஜன் படத்துல என் ரோலைப் பார்த்துட்டு அவரே விழுந்து விழுந்து சிரிச்சாரு. கமல் எப்போ கூப்பிட்டாலும் நடிக்கப் போயிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதே பேட்டியில் சித்ரா லட்சுமணனும் உடன் இருந்தார்.

Also read: சந்திரபாபுவாக நடிக்கும் விஜய்சேதுபதி… மிரட்டும் வில்லன் அவரா? அப்படின்னா படம் ஹிட் தான்..!

அவர் கமலைப் பற்றிப் பேசும்போது, அவருடன் பணியாற்றுவதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம். தயாரிப்பாளராவும் சரி. இயக்குனராவும் சரி. என்னன்னா அவ்வளவு ஒழுக்கமான நடிகர். காலைல 8 மணிக்கு சூட்டிங்னா 7.45மணிக்கே மேக்கப்போட தயாரா இருப்பாரு.

அதே மாதிரி 6 மணி வரை தான் நடிப்பேன்னு சொல்ல மாட்டார். காட்சி நல்லா வரணும்னா நேரத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டாரு. சூரசம்ஹாரம் படத்துல 18 மணி நேரம் தொடர்ச்சியா பல நாள்கள் வேலை செய்தார். அப்படி ஒரு நடிகர் அவர் என்றார்.