டோன்ட் டச் மி!.. கையை பிடித்த கமெடி நடிகரிடம் கோபப்பட்ட தல!.. இப்படிப்பட்டவரா அஜித்!..

Published on: August 28, 2024
Ajith22
---Advertisement---

Ajithkumar: தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வளர்ந்தவர்தான அஜித். முதலில் தான் ஆசைப்பட்ட பைக் ஒன்றை வாங்குவதற்காகவே அவர் அமராவதி படத்தில் நடித்தார் என்பது பலருக்கும் தெரியாது. அப்படி அவர் தயாரிப்பாளரிடம் கேட்ட சம்பளம் 40 ஆயிரம் ரூபாய்.

அதன்பின் படிப்படியாக வளர்ந்து இப்போது 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இத்தனைக்கும் பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை கலைத்தவர்தான் அஜித். மேலும், கடந்த பல வருடங்களாகவே எந்த சினிமா விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை.

இதையும் படிங்க: முடிஞ்சா உன் குழந்தை மேல் சத்தியம் பண்ணு! யோகிபாபுவுக்கு எதிரா திரும்பிய கோடம்பாக்கம்

அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கும் வரமாட்டார். தொலைக்காட்சியிலோ, ஊடகங்களிலோ பேட்டி கொடுக்க மாட்டார். அவரை பார்க்க வேண்டுமெனில் ஒன்று அவர் நடிக்கும் படத்தில் பார்க்கலாம். இல்லையெனில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பார்க்கலாம். அதுகூட எல்லோராலும் முடியாது.

அஜித்தை பற்றி அவருடன் பழகிய பலரும் சொல்வது அவரின் பண்பு பற்றித்தான். மிகவும் எளிமையானவர், பண்பாக பேசுவர், பெண்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார், சீனியர் நடிகர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார், எல்லோரிடமும் அன்பாக பழகுவார், நாகரீகமாக பழகுவார், சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பார், பலருக்கும் உதவி செய்திருக்கிறார், ரியல் ஜென்டில்மேன் என அவரை பற்றி அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் சொல்வதுண்டு.

ஆனால், அவரை பற்றி யோகிபாபு சொன்ன ஒரு விஷயம் நேர்மாறாக இருக்கிறது. யோகிபாபு வளர்ந்து வரும் ஒரு நேரத்தில் அஜித்துடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அப்போது ஒரு காட்சியில் அஜித்தின் கையை பிடித்திருக்கிறார் யோகிபாபு. அப்போது கோபப்பட்ட அஜித் ‘டோண்ட் டச் மீ’ என சொல்லி இருக்கிறார்.

இந்த தகவலை வலைப்பேச்சி பிஸ்மியிடம் சில வருடங்களுக்கு முன்பே சொல்லியிருந்தார் யோகிபாபு. ஆனால், இப்போதுதான் அவர்கள் இந்த தகவலை சொல்லி இருக்கிறார்கள். சமீபத்தில் வலைப்பேச்சி பற்றி தரக்குறைவாக பேசியிருந்தார் யோகிபாபு. இதனால் ஏற்பட்ட கோபத்தில்தான் யோகிபாபு பற்றி இப்போது அவர்கள் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சந்திரபாபுவாக நடிக்கும் விஜய்சேதுபதி… மிரட்டும் வில்லன் அவரா? அப்படின்னா படம் ஹிட் தான்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.