Cinema News
வாழைப் படத்தின் கதையை முதலில் சொன்னது நான்தான்… யார்றா அது புதுசா இருக்கு..?
வாழை படத்தைப் பற்றித் தற்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது. எழுத்தாளர் சோ.தர்மன் வாழை படத்தின் கதை நான் அச்சு ஊடகத்தில் எழுதியது. அதைத் தான் மாரி செல்வராஜ் திரைப்படமாக எடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் சொல்வது இது தான்.
வாழை படத்தை நான் நேத்து தான் பார்த்தேன். நிறைய நண்பர்கள் போன் பண்ணி ஐயா வாழை படம் பாருங்க. படம் பாருங்கன்னு சொன்னாங்க. என்னன்னு கேட்கும்போது நீங்க எழுதுன சிறுகதை வந்து அப்படியே இருக்குது. நீங்க பாருங்கன்னு சொன்னாங்க. அப்புறம் தான் படத்தைப் போய் பார்த்தேன். ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த வாழை சிறுகதையை ‘வாழையடி ….’ னு போட்டு எழுதினேன்.
அதாவது வாழையடி வாழையா இந்த சிறுவர்கள் இப்படித்தான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்கன்னு மீனிங் வர்றதுக்காகப் போட்டுருப்பேன். என்னுடைய நீர்ப்பழிங்கற தொகுப்புல இரண்டாவது கதையா இது இருக்குது. அதுல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய அத்தனை விஷயங்களும் வாழைப்படத்துல அப்படியே இருக்குது.
அவர் சினிமாவுக்காக சில விஷயங்களைச் சேர்த்து வச்சிருக்காரே ஒழிய படத்துல சிறுவனோட உழைப்பு, தரகனாரு, கூலி, டிரைவரு, கிளீனரு, அந்த வரப்புல நடந்து போற கஷ்டம், தண்ணீக்குள்ள தவறி விழறது, ரஜினி, கமல் பனியன் போட்டுட்டு இது பண்றது, எல்லாமே கிட்டத்தட்ட அதுதான்.
என்னுடைய சிறுகதை, அவருடைய திரைப்படம் இரண்டுமே சிறுவர்களுடைய கடினமான உழைப்பு வாழைத்தார் சுமப்பதன் மூலமாக எப்படி சுரண்டப்படுகிறது என்பதை சொல்லியிருக்கிறது. நானும் அதே தான் பதிவு பண்ணியிருக்கிறேன். அவரும் அதே தான் பண்ணிருக்காரு. ஊடகங்கள் வெவ்வேறு. நான் அச்சு ஊடகம். அவர் காட்சி ஊடகத்துல பண்ணிருக்காரு.
Also read: வாழை படத்தில் பெத்த கோடியை சம்பாரித்த மாரி செல்வராஜ்… இதெல்லாம் நடந்து இருக்கா?
எனக்கு வந்து வாழைப்பற்றி எதுவுமே தெரியாது. நம்ம பக்கம் வாழை பயிரிடல. என்னுடைய உடன்பிறந்த தம்பியும், எங்க அம்மாவோடு பிறந்த தாய்மாமனாரும் சம்பந்தம் பண்ணி இருக்கிற ஊரு ஸ்ரீவைகுண்டம் பக்கத்துல உள்ள பொன்னன்குறிச்சி. அங்க வந்து பிரதான விவசாயமே வாழை தான். எங்க மாமாவுக்கு அங்க வாழைத்தோட்டம் நிறைய இருக்கு. நான் விடுமுறை நாள்கள்ல அங்கு போய் நாலு நாள், ஒரு வாரம் தங்குறது உண்டு.
அப்போ இந்த சிறுவர்கள் படக்கூடிய கஷ்டத்தைப் பார்த்துத்தான் அவங்களை சில இன்டர்வியூக்கள் எல்லாம் பண்ணித் தான் இந்தக் கதையே எழுதினேன். இல்லேன்னா எழுதிருக்க முடியாது. நானும் அவங்களைப் பலமுறை பார்த்து, கேட்டு, மாமனார் சம்பந்தம் பண்ணியிருக்குறது பெரிய பண்ணையார். அவருக்கு நிறைய தோட்டம் இருக்கு.
அவருக்கிட்ட சில விவரங்கள் கேட்டு தான் நான் அந்தக் கதையை எழுதினேன். ஒரே தீம்ல பயணப்படும்போது அப்படியேத் தானே வரும். மற்றபடி அவரும் அதையேக் கையாள்றாரு. ஒருவேளை அவர் என்னோட சிறுகதையைப் படிக்காம இருந்துருக்கலாம். அவரே வாழையும் சுமந்துருக்கலாம்.
ஆனா அந்தக் காட்சியை அந்த சிறுவர்கள் படக்கூடிய வலியை முதன்முதலாக ஒரு உருவமாக மாற்றியது என்ற முறையில் நான் தான் அதற்கு உரிமையாளன். முதல் முதலாக ஒரு சிறுகதை வடிவம் கொடுக்கிறேன். அதை பத்து வருஷத்துக்கு முன்னாடியே நான் கொடுத்துட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.