இளம்பெண்ணுடன் கசமுசாவில் சாமி நடிகர்? கடுப்பாகி மனைவி செய்த செயல்… சும்மாவா இருப்பாங்க….

Published on: August 29, 2024
---Advertisement---

Kollywood: சமீப காலமாக மலையாள சினிமாவில்  நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என ஹேமா குழு அளித்த அறிக்கை தற்போது அதிர்ச்சி அளித்து  வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் சேட்டையும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரொம்பவே கஷ்டப்பட்டு தனக்கான இடத்தை உருவாக்கியவர் சாமி நடிகர். இவருக்கு கல்யாண வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நடிகரின் மனைவி அவருடைய நண்பர்களுக்கு ஒரு மெசேஜை அனுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படம் விஜயிற்காக எழுதியது இல்லை.. இந்த நடிகருக்குதான் எழுதியதாம்…

அதில், என்னுடைய கணவரை யாரும் இனி வீட்டில் சேர்க்கக்கூடாது. அதிலும் பெண் பிள்ளைகள் இருப்பவர்கள் கொஞ்சம் உஷாராக இருக்குமாறு குறிப்பிட்டுள்ளாராம். இதை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்ததாம்.  என்ன விஷயம் என மனைவியிடம் நண்பர்கள்  கேள்வியை முன்வைக்க விஷயத்தை உடைத்து இருக்கிறார்.

நடிப்பில் கெட்டியான இந்த நடிகர் அவருடைய நண்பர் ஒருவரின் மகளுடன் காதலில் விழுந்து விஷயம் தனிக்குடித்தனம் வரை போய்விட்டதாம். இதிலும் அப்பெண் இவரின் மகள் வயது என்பது மேலும் அதிர்ச்சியாகும் விஷயமாக மாறி இருக்கிறது. இது குறித்து மனைவி கேட்டபோது தப்பு என்னோடது இல்லை என அசால்டாக தட்டி சென்று இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?

இதில் கடுப்பான மனைவி விஷயத்தை வெளியில் கசிய விட்டு தன்னுடைய திருமண வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள போராடி வருகிறாராம். ஆனால் நடிகரின் புகழுக்காக இளம் வயது பெண்ணோ தனி குடித்தனத்தில் ஜாலியாக இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.