Connect with us

latest news

அப்போ பிக்பாஸ் இவர்தானா? புரோமோ ஷூட்டில் கசிந்த வீடியோ… பக்காவா இருக்காரே!..

BiggbossTamil: இந்த மாதத்தின் மிகப்பெரிய வைரல் கேள்வியாக இருப்பது எப்பொழுது பிக்பாஸ் சீசன் எட்டு தொடங்கும். யார் அதை தொகுத்து வழங்கப் போகிறார் என்பதுதான். தற்போது இதற்குரிய முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.

ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதிக்கத்தை கடந்து சில வருடங்களாக செலுத்தி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. 16க்கும் அதிகமான பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 கேமராக்கள் சூழ வாழ வேண்டும். இது ரசிகர்களிடம் நாளுக்கு நாள் ஆச்சரியத்தையே ஏற்படுத்தி வந்தது.

இதையும் படிங்க: கோட் படம் விஜயிற்காக எழுதியது இல்லை.. இந்த நடிகருக்குதான் எழுதியதாம்…

இந்நிலையில் இந்த வருடம் எட்டாவது பிக் பாஸ் சீசன் தொடங்கப்பட இருக்கிறது. எப்போதும் போல கமல் தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்த்து வந்த நிலையில் திரைப்பட வேலை இருப்பதாக கூறி அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் முதலில் யார் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் சில முக்கிய நடிகைகளும் உள்ளடக்கியுள்ளனர். சிம்பு, ரம்யா கிருஷ்ணன், பார்த்திபன், சரத்குமார், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

vijaysethupathi

பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் இருப்பதால் அவர் மேலும் நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யம் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:  அஜித், விஜய்க்கு முந்தைய கால நடிகர்கள் ஒழுக்கமானவர்களா? புது பிரச்சினையை கிளப்பிய நடிகை

இதில் வெள்ளைக் கோட்டில் விஜய் சேதுபதி இருக்கிறார். இதனால் இது பிக் பாஸ் ஷூட்டிங்காக தான் இருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆக இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் குறித்த முக்கிய அறிவிப்பு முதல் ப்ரோமோவாக வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி  ஷூட்டிங் வீடியோவைக் காண: https://www.threads.net/@therkinkural/post/C_NGuOMRPtS/?xmt=AQGziYklKeCGFjpjtMhaBsHWb-tb-yvn2nfeiRQCdfJJZg

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top