Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தள்ளி நில்! கொரோனா அச்சத்தில் எச்சரித்தவர் குத்திக்கொலை – உதகையில் அதிர்ச்சி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட 170 நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

f46bb20a73ea4857bad4132c66dc505f

இந்நிலையில், உதகையி நொண்டிமேடு பகுதியில் வசிக்கும் ஜோதிமணி என்பவர் உதகை நகராட்சி சந்தையில் பாரம் தூக்கும் தொழில் செய்து வந்தார். இவர் இன்று மதியம் நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்த சென்றுள்ளார். அப்போது தேவராஜ் என்பவர் அங்கே வந்துள்ளார். அவர் கேரளாவில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வருவதாக் ஹோட்டல் உரிமையாளரிடம் கூறியுள்ளார். அப்போது, கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் நீ கொஞ்சம் தள்ளி நில் என தேவராஜிடம் ஜோதிமணி கூறியதால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் கைகலப்பில் முடிந்தது.

இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் ஹோட்டலில் இருந்த கத்தியை எடுத்து ‘உங்கள் ஊரில் கொரோனா பரவாதா?’ எனக்கூறி ஜோதிமணியின் கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். எனவே, ரத்தவெள்ளத்தில் ஜோதிமணி கீழே சரிந்தார். எனவே, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். எனவே, தேவராஜை உதகை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top