வலிமை படத்தில் இருந்து தூக்கப்பட்ட யோகிபாபு! இவ்ளோ பிரச்சினைக்கும் இதுதான் காரணமா?

Published on: August 29, 2024
valimai
---Advertisement---

Yogibabu: எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் முன்னதாக யோகி பாபு நடிக்க இருந்ததாகவும் அதன் பிறகு படத்திலிருந்து அவர் தூக்கப்பட்டதாகவும் அதனாலையே அஜித் மீது யோகி பாபு தேவையில்லாத ஒரு குற்றச்சாட்டை வைத்தார் என ஒரு செய்தி இப்போது வைரலாகி வருகின்றது.

ஏற்கனவே அஜித்தின் கையை யோகி பாபு பிடிக்க அதற்கு அஜித் டோன்ட் டச் என சொன்னதாக யோகி பாபு தங்களிடம் வந்து கூறினார் என வலைப்பேச்சில் அந்தணனும் பிஸ்மியும் கூறி இருந்தார்கள். அதிலிருந்து இந்த பிரச்சனை பெரிய பூதாகரமாக மாறி இருக்கிறது.

இதையும் படிங்க: டிடிஎஃப் வாசன் மீது திடீர் கொலைமுயற்சி… வெளியான அதிர்ச்சி வீடியோ…

இந்த நிலையில் அஜித்தை பற்றி யோகி பாபு அப்படி சொன்னதற்கான பின்னணி காரணம் என்ன என்பதையும் பிஸ்மி கூறி இருக்கிறார். ஏற்கனவே வேதாளம் படத்தில் அஜித்துடன் இணைந்து யோகி பாபு நடித்திருந்தார். அதன் பிறகு வலிமை படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் கால்சீட் கொடுத்துவிட்டு எப்பவும் போல படப்பிடிப்பிற்கு வராமல் மிகவும் டார்ச்சர் செய்தாராம் யோகி பாபு. அதனால் அந்த படத்தில் இருந்து யோகி பாபுவை விலக்கி விட்டதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த ஒரு கோபத்தால் தான் அஜித்தை பற்றி யோகி பாபு இப்படி தேவையில்லாமல் கூறினார் என பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: லால் சலாம் ஓடிடிக்காக ‘மரண’ வெயிட்டிங்கில் ரசிகர்கள்… காரணம் என்ன?

யோகி பாபுவை பொறுத்த வரைக்கும் சரியான நேரத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்ற ஒரு தகவல் வந்து கொண்டே இருக்க வலிமை படத்தில் அதுவும் அஜித் நடிக்கும் படத்தில் யோகிபாபுக்காக அஜித் எப்படி காத்திருக்க முடியும் ?

அதனால் ஒரு வேளை அஜித் மற்றும் அந்த படக்குழுவே சேர்ந்து தன்னை இந்த படத்தில் இருந்து தூக்கி இருக்கலாம் என யோகி பாபு நினைத்திருக்கலாம். அதனாலேயே அஜித் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை யோகி பாபு வைத்திருக்கலாம் என பிஸ்மி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படத்தின் 4வது சிங்கிள் ரிலீஸ் தேதி இதுதான்!.. சர்ப்பரைஸ் இப்படி உடைஞ்சி போச்சே!….

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.