நடிகராக லட்சக்கணக்கில் கல்லா கட்டும் மிஷ்கின்!. ஒரு நாளைக்கு இவ்வளோ சம்பளமா?!…

Published on: August 29, 2024
mysskin
---Advertisement---

Mysskin: தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். சித்திரம் பேசுதடி திரைப்படம் முலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபித்தார். அடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் அவர் என்ன மாதிரியான இயக்குனர் என ரசிகர்களுக்கு காட்டியது.

திரைப்படங்களில் பேயை பயமுறுத்துவதற்கு இயக்குனர் பயன்படுத்தினால் மிஷ்கின்தான் பேயை தேவதை போல காட்டினார். வழக்கமாக தமிழ் சினிமாவில் இருக்கும் மரபுகளை உடைப்பதுதான் மிஷ்கினின் பழக்கம். காமெடி நடிகராக பார்க்கப்பட்ட பாண்டியராஜனை அஞ்சாதே படத்தில் அவர் காட்டியிருந்தது வேற லெவல்.

இதையும் படிங்க: வலிமை படத்தில் இருந்து தூக்கப்பட்ட யோகிபாபு! இவ்ளோ பிரச்சினைக்கும் இதுதான் காரணமா?

சாக்லேட் பாயாக இருந்த பிரசன்னாவை அசத்தலான சைக்கோ வில்லனாக காட்டியிருந்தார். மிகவும் சாஃப்ட்டான வேடங்களில் நடித்து வந்த இயக்குனர் சேரனை யுத்தம் செய் படத்தில் வேறமாதிரி காட்டியிருந்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்களும் ரசிகர்களை கவர்ந்தது.

படங்களை இயக்கி வந்த மிஷ்கின் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். இதுவரை கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்துவிட்டார். இதில் சூப்பர் டீலக்ஸ், மாவீரன், லியோ போன்ற படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அஜித்தை பற்றி யோகிபாபு சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா? பூதாகரமாக கிளம்பிய பிரச்சினை

ஒருபக்கம், புதுப்படங்கள் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் மிஷ்கின் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. கொட்டுக்காளி படம் தொடர்பான விழாவில் அவர் பேசியதை கேட்டு படத்தை தியேட்டரில் போய் பார்த்த ரசிகர்கள் மிஷ்கினை திட்டிக்கொண்டே வெளியே வந்தார்கள்.

ஒருபக்கம், ஒரு படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு 10 லிருந்து 15 லட்சம் வரை சம்பளம் கேட்கிறாராம் மிஷ்கின். லவ்டுடே பிரதீப் நடித்து வரும் எல்.ஐ.சி படத்தில் ஒரு நாளைக்கு 12 லட்சம் சம்பளம் வாங்கிய மிஷ்கின் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தில் ஒரு நாளைக்கு 15 லட்சம் சம்பளம் கேட்டு பின்னர் அது 10 லட்சமாக மாறியிருக்கிறதாம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.