Connect with us
santhanam

Cinema News

இவர் இல்லைனா சந்தானம் இல்ல.. ஆனா கடைசில அந்த நடிகருக்கு ஏற்பட்ட நிலைமை?

Santhanam: காமெடி நடிகராக இருந்து இன்று ஒரு பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த நடிகர்கள் எத்தனையோ பேர். அதில் சந்தானமும் ஒருவர் .விஜய் டிவியில் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது லொள்ளு சபா. அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர் சந்தானம்.

அவருடன் சேர்ந்து சுவாமிநாதன், சேஷு, மாறன், யோகி பாபு போன்ற நடிகர்கள் அனைவருமே அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மக்களை உற்சாகப்படுத்தினார்கள். இந்த நிலையில் லொள்ளு சபா சுவாமிநாதன் நடிகர் சந்தானத்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் சந்தானத்துடன் 20 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் சுவாமிநாதன்.

இதையும் படிங்க; வெற்றிமாறனால் சூர்யா, ஷங்கருக்கு வந்த இடியாப்ப சிக்கல்?

எப்படி கவுண்டமணி செந்தில் காமெடியை அனைவரும் ரசிக்கிறார்களோ அதைப்போல சந்தானம் மற்றும் சுவாமிநாதன் காம்போவில் வரும் காமெடியை அனைவரும் ரசித்தனர். இவர்கள் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனாலையே சுவாமி நாதனை பார்க்கும் பொழுது இன்னும் நீங்கள் சந்தானத்துடன் சேர்ந்து நடிக்கலாமே?

உங்கள் இருவரின் காமெடியும் அற்புதமாக இருக்கிறது. ஏன் நீங்கள் சந்தானத்துடன் சேர்ந்து நடிக்கவில்லை என கேட்கிறார்களாம் ரசிகர்கள். அதற்கு சுவாமிநாதன் இதை சந்தானத்திடம் அல்லவா நீங்கள் கேட்க வேண்டும் என கூறுவாராம் .ஆனால் இதைப் பற்றி சந்தானத்திடமே சுவாமிநாதன் பலமுறை கேட்டிருக்கிறாராம். அடுத்த படத்தில் பார்ப்போம். இந்த படம் முடிந்ததும் இன்னொரு படத்தில் பார்ப்போம் என சொல்லி விடுவாராம் சந்தானம்.

இதையும் படிங்க: வலிமை படத்தில் இருந்து தூக்கப்பட்ட யோகிபாபு! இவ்ளோ பிரச்சினைக்கும் இதுதான் காரணமா?

இருந்தாலும் அந்த கதைக்கு நான் கரெக்டாக இருப்பேனா என்பதையும் பார்க்க வேண்டும் .அதை பார்த்து தானே சந்தானம் என அழைப்பார் என்றும் சுவாமிநாதன் விட்டுக்கொடுக்காமல் பேசினார். ஒரு சமயம் சந்தானம் நடித்த ஒரு படத்தில் சுவாமிநாதன் நடிக்க அப்போது சுவாமிநாதனுக்கு கேரவன் கிடையாதாம். சந்தானம் அந்த சமயம் பெரிய அளவில் ரீச்சில் இருந்தாராம்.

கேரவனுக்குள் இருந்த சந்தானத்திடம் சுவாமிநாதன் வந்திருப்பதை சொல்ல உடனே அவரை கேரவனுக்கு அழைத்திருக்கிறார் சந்தானம். சுவாமிநாதன் உள்ளே போக அப்போது சந்தானத்தின் மேக்கப் உதவியாளர் புஜி பாபு  ‘இங்கே எல்லாம் வரக்கூடாது. அண்ணனை வெளியில வச்சு பாருங்க. அவர் வெளியில் வருவாரு. அப்ப பார்த்துக் கொள்ளுங்கள்’ என கூறி அனுப்பி விட்டாராம்.

swaminathan

swaminathan

இதையும் படிங்க: நடிகராக லட்சக்கணக்கில் கல்லா கட்டும் மிஷ்கின்!. ஒரு நாளைக்கு இவ்வளோ சம்பளமா?!…

உடனே அருகில் இருந்தவர்கள் ஏன் இன்னும் சந்தானத்தை பார்க்க போகவில்லையா எனக் கேட்டதற்கு உங்க அண்ணனை இங்க வந்து பார்க்க சொல்லு. அந்த புஜி பாபு என்னை விடமாட்டேங்கிறான் என சொன்னாராம். இது சந்தானத்துக்கு தெரிந்ததும் புஜ்ஜிபாபுவை திட்டினாராம். சுவாமிநாதன் இல்லை என்றால் நான் இல்லை. அவர போய் வரச் சொல்லு என கூறினாராம் சந்தானம்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top