Connect with us
Rajni balachander

latest news

ரஜினியை செருப்பால அடிப்பேன்னு சொன்ன பாலசந்தர்…! நடந்தது இதுதான்..!

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்பது ரஜினிகாந்தின் குரு என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அவர் ரஜினி வாழ்க்கையில் எந்தளவு பங்காற்றி இருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினி நடித்துக் கொண்டு இருந்தார். அவரது காட்சிகள் அனைத்தும் முடிந்ததால் தனது அறைக்கு வந்து மது அருந்தினார். அப்போது பாலசந்தரிடம் இருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. ஒரே ஒரு ஷாட் இருக்கு. அதுல நடிக்க வேண்டி இருக்குன்னு சொல்றாரு பாலசந்தர்.

Also read: போட்டிக்கு வர்ற கங்குவா படத்தைப் பற்றி ரஜினி என்ன நினைப்பாரு? வேற லெவல் திங்கிங்..!

ஆனா அதைக் கேட்டதும் ரஜினி வேறு வழியில்லாமல் அவசரம் அவசரமாகக் குளித்து வாயை எல்லாம் நல்லா கொப்பளித்துக் கழுவி விட்டு ஷாட்டுக்குப் போறார். பாலசந்தரை விட்டு விலகி விலகி நின்று கொள்கிறார். அப்படி இருந்தும் பாலசந்தருக்கு ரஜினி மது அருந்திய விஷயம் தெரிந்து விட்டது.

படப்பிடிப்பு முடிந்ததும் என் ரூமுக்கு வான்னு பாலசந்தர் சொல்கிறார். அவர் அப்படிக் கூப்பிட்டதும் ரஜினிக்கு வியர்த்து விட்டது. அங்கு போனதும் என்ன சொல்லப் போகிறாரோன்னு நினைத்துப் பயப்படுகிறார். அங்கு சென்றதும் பாலசந்தர் சொல்கிறார்.

‘நாகேஷைப் பற்றி உனக்குத் தெரியுமா? அவர் கால் தூசுக்கு நீ ஆக மாட்டே? அவரோட வாழ்க்கை நீ குடிச்சிக்கிட்டு இருக்குற மதுவால தான் சீரழிந்தது. இனிமே என்னோட சூட்டிங்குக்கு வரும்போது மது அருந்தி வந்தாலும் வேறு படங்களில் இப்படி மது அருந்தினாலும் உன்னை செருப்பால அடிப்பேன்’னு சொன்னார்.

Also read: விஜயின் கோட் ரிலீஸ்.. ரசிகர்களை ஏமாற்றிய அஜித்!.. இப்படி ஒன்னும் இல்லாம போச்சே!..

அன்று முதல் ரஜினி மது அருந்துவதை விட்டு விட்டார். குளிர்பிரதேசங்களில் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போதும் அவர் சொன்ன அந்த வார்த்தை மனதில் உறுத்தியது. அன்று முதல் ரஜினி மது அருந்துவதையே விட்டுவிட்டார். பாலசந்தர் எனக்கு நடிப்பில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் குருநாதர் தான் என்று சொல்கிறார் ரஜினி.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top