லியோவில் நடந்தது கோட்-டில் நடக்கக் கூடாது!… ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்த வெங்கட்பிரபு!…

Published on: September 1, 2024
goat
---Advertisement---

Goat: பொதுவாக அதிக எதிர்பார்ப்புகளே ஒரு படத்தின் வெற்றிக்கு எதிராக அமைந்துவிடும். ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்துவிட்டாலே போதும். அவர்களின் ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க துவங்கிவிடுவார்கள்.

அதிலும், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களின் படங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால் சொல்லவே தேவையில்லை. லியோ படமும் இந்த பிரச்சனையை சந்தித்தது. விக்ரம் எனும் மெகா ஹிட்டுக்கு பின் லோகேஷ் இயக்கிய படம்தான் லியோ. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் – விஜய் இணைந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் லியோ படம் பற்றியே ரசிகர்கள் அதிகம் பேசினார்கள். ஒருபக்கம், அப்படம் தொடர்பான அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருந்தது. இது படத்தின் மீது அதிகப்படியான ஹைப்பை உருவாக்கிவிட்டது. ஆனால், படம் வெளியான போது படத்தின் 2ம் பாதி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

அதுவே அப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை கொண்டு வந்து வசூலும் பாதிக்கப்பட்டது. லியோ படத்துக்கு பின் விஜய் வெங்கட்பிரபுவுடன் கூட்டணி அமைத்து கோட் படம் உருவானது. ஆனால், துவக்கம் முதலே இப்படம் பற்றி வெங்கட்பிரபு அதிகம் பேசவில்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பின் படத்தின் பாடல்கள் மட்டுமே ஒவ்வொன்றாக வெளியானது.

goat
#image_title

இடையில் விஜய் ரசிகர்கள் பலமுறை திட்டியும் வெங்கட்பிரபு எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்புதான் டிரெய்லர் வீடியோவை வெளியிட்டது படக்குழு. இந்நிலையில், இதுபற்றி கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியிருக்கிறார்.

ஹைப் எனும் மிகையான எதிர்பார்ப்பு இருப்பது ஒரு படத்தின் வியாபாரத்திற்கு நல்லதல்ல. ஒரு புத்தகத்தை படித்துவிட்டு படம் பார்க்கப்போவது போன்ற விஷயம். ரசிகர்கள் அனைவருமே தங்களுக்குள் ஒரு எதிர்பார்ப்பு வைத்திருப்பார்கள்.

ஒரு இயக்குனர் அனைவரின் எண்ணங்களையும் உணர்ந்து படமெடுப்பது சாத்தியாமே இல்லை. எனவேதான். கோட் படத்து அதிக எதிர்பார்ப்பு வந்துவிடக்கூடாது என முன்பே முடிவு செய்து குறைவான அப்டேட்டுகளை கொடுத்து நேரடியாக டிரெய்லரை மட்டும் வெளியிட்டோம்’ என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஆமா லோகேஷ் ஸ்டைல் கோட்டில் இருக்கு.. வெங்கட் பிரபு சொன்ன உண்மை..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.