அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தில் அவருடன் ஜோடி சேரப்போகும் ஹீரோயின் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் அஜித் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தினை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இதனால் அப்படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மறுபுறம் மார்க் ஆண்டனி என்னும் முரட்டு ஹிட்டினை கொடுத்த பேன்பாய் ஆதிக் இயக்கத்தில் அஜீத் நடிக்கிறார். இதில் அஜித் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.
இதனால் அவரது ரசிகர்கள் மாபெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். இந்த நிலையில் குட் பேட் அக்லி ஹீரோயினாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.
ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா, விடாமுயற்சி உள்ளிட்ட பல்வேறு படங்களில் இருவரும் முன்னதாக இணைந்து நடித்துள்ளனர். தற்போது மீண்டும் ஒருமுறை இருவரும் இணைந்து நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளது.
