முதல் நாளே விஜய் என்கிட்ட ஸ்டிரிக்டா சொன்னது! ‘கோட்’ பட தயாரிப்பாளர் சொன்ன விஷயம்

Published on: September 2, 2024
vijay
---Advertisement---

Actor Vijay:தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக திகழ்ந்த வருபவர் நடிகர் விஜய். தற்போது அவரது நடிப்பில் கோட் திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி உலகெங்கிலும் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றது.

அந்த படத்தின் வருகைக்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  உலகெங்கிலும் கிட்டத்தட்ட 5000 ஸ்கிரீனில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கூலி படத்தில் இணைந்த சூப்பர் நடிகை… எதிர்பார்க்கல இல்ல… இப்படி ஒரு சர்ப்ரைஸ..!

படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சவுத்ரி நடிக்க அவர்களுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, மோகன், யோகி பாபு போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவருமே ஒரு காலத்தில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தவர்கள்.

அது மட்டுமல்லாமல் படத்தில் விஜயகாந்தின் ஏ ஐ தொழில் நுட்பமும் பயன்படுத்தி இருப்பதால் ஒட்டுமொத்த சினிமாவும் இந்த படத்தின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்திய நிலையில் ட்ரெய்லர் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது .

இதையும் படிங்க: கோட் படத்தோட முதல் நாளில் இருந்தே அதுல தான் கவனமாம்..! சொன்னது விஜயின் தீவிர ரசிகை!

archana
archana

அதுமட்டுமல்லாமல் யாரும் எதிர்பாராத பல சர்ப்ரைஸ்கள் இந்த படத்தில் இருப்பதாகவும் வெங்கட் பிரபு பல பேட்டிகளில் கூறி வருகிறார். நேற்றைய ஒரு நேர்காணலில் படத்தில் நடித்த பிரேம்ஜி கோட் படத்தின் முதல் 60 செகண்ட்ஸ் ஒரு கூஸ்பம்பாக ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இப்படி ஆளாளுக்கு படத்தைப் பற்றி ஒரு பெரிய ஹைப்பை கொடுத்து வரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய் பற்றி ஒரு தகவலை சொல்லி இருக்கிறார் .

படம் ஆரம்பித்த முதல் நாளிலேயே விஜய் அர்ச்சனா கல்பாத்தியிடம் ஒன்று சொல்லியதாக கூறியிருக்கிறார். அதாவது படத்தில் நடிக்கும் அனைவருமே பெரிய நடிகர்கள். அதனால் எனக்கு எப்படி அன்பும் மரியாதையும் கொடுக்கிறீர்களோ அதே போல் சமமான அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். எனக்கு என்னெல்லாம் செய்கிறீர்களோ அதை அவர்களுக்கும் செய்ய வேண்டும் என கூறினாராம் விஜய். இதை ஒரு பேட்டியில் அர்ச்சனா கல்பாத்தி கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படத்தின் முதல் 60 செகண்ட்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா? புது புது அப்டேட் கொடுத்த பிரேம்ஜி

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.