Connect with us
radhika

Cinema News

எங்க அப்பா காலத்துல இருந்தே நடக்குது.. பேர கேட்டா பயந்துருவீங்க! உண்மைய உடைத்த ராதிகா

Actress Radhika: மலையாள சினிமாவில் சமீப காலமாக நடந்து வரும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்து ஹேமா கமிஷன் அறிக்கை ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. 234 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் பல முக்கிய நடிகர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது .

அதுதான் இப்போது மலையாள சினிமா துறையையே கதிகலங்க வைத்திருக்கிறது. இந்த பிரச்சனை எழுந்ததிலிருந்து மலையாள சினிமாவில் செயல்பட்டு வந்த அம்மா நடிகர் சங்கம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டிருக்கிறது. அந்த சங்கத்திலிருந்து பெரிய பெரிய நடிகர்கள் தங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்

இது ஏன் என்பது தான் இப்போது அனைவரையும் சந்தேகமாக பார்க்கவைத்திருக்கிறது. சங்கத்தில் இருந்து கொண்டே பிரச்சனைகளை சரி செய்யும் நிலையில் இருக்கும் நடிகர்கள் ஏன் சங்கத்தை திடீரென கலைத்தார்கள் என்று அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இருந்தும் பல நடிகைகள் சினிமாவில் நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து பல வகைகளில் பேசி வருகிறார்கள். இதில் ராதிகா அவருடைய ஒட்டுமொத்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த படத்துல வேறலெவல் விஜயை பார்ப்பீங்க!.. ஹைப் ஏத்தும் வெங்கட்பிரபு!…

அவர் கூறும் போது இது மலையாள சினிமாவில் மட்டுமல்ல தமிழிலும் நடக்கிறது. மற்ற மொழி சினிமாக்களிலும் நடக்கிறது என்பது போல கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறும் போது இது இப்போது மட்டுமல்ல அந்த காலகட்டத்தில் இருந்தே நடந்து வரும் ஒரு பிரச்சனையாகும்.

இதுபோன்ற ஒரு சம்பவம் எனக்கு நடக்கவில்லை. அப்படி என்னை யாராவது அப்ரோச் செய்தால் அவர்களுடைய மூஞ்சியை சிதைத்திருப்பேன் என்று காரசாரமாக பதில் கூறியிருக்கிறார் ராதிகா. அது மட்டுமல்லாமல் இந்த மாதிரி பிரச்சனை என் அப்பா காலத்தில் இருந்து நடந்து கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: ‘அவர் எப்பவுமே கிங்’தான்.. அஜித் பற்றி கேட்டதற்கு அர்ஜூன் கொடுத்த ரிப்ளே

அப்போ உள்ள நடிகர்களின் பெயரை கேட்டால் நீங்கள் பயந்துருவீங்க. யார் யார் என தெரியும். அதனால் சூழ்நிலையைப் புரிந்து பெண்களாகட்டும் சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் ஆகட்டும் அவர்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது எல்லா துறைகளிலும் நடக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது என ராதிகா கூறி இருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top