Connect with us

Cinema News

மலையாள கதையே ஓயலை… தெலுங்கு சினிமா பக்கம் பிரச்னை பத்திக்கொண்டதாம்.. பதற்றத்தில் பிரபல ஹீரோக்கள்

Malayalam: மலையாள சினிமாவில் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த பிரச்சனைக்கு தொடர்ந்து அதிர்ச்சியான சம்பவங்கள் சினிமா உலகில் நடந்து வருகிறது.

நடிகை பாவனா மீது நடந்த பாலியல் அத்துமீறலை தொடர்ந்து நடிகைகள் மலையாள நடிகர் சங்கமான அம்மா மீது எதிர்ப்பை பதிவு செய்து வந்தது. அதைத்தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு இது குறித்து விசாரணை நடந்தது. 

இதையும் படிங்க: இந்த படத்துல வேறலெவல் விஜயை பார்ப்பீங்க!.. ஹைப் ஏத்தும் வெங்கட்பிரபு!…

அந்த விசாரணை முடிந்து அறிக்கையும் கேரளா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் அது வெளியிடப்படாமல் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் அந்த அறிக்கையில் இருந்து சில தகவல்கள் இணையத்தில் கசிந்தது. இதை அடுத்து மோகன்லால் உள்ளிட்ட அம்மா சங்க நிர்வாகிகள் பதவி விலகினர்.

இதைத்தொடர்ந்து கேரளா சினிமாவில் புயல் அடித்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது தெலுங்கு சினிமா பக்கமும் பிரச்சனை திருப்பி இருக்கிறது. நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவிலும் இதுபோன்ற அட்ராசிட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறதாக ஒரு விஷயத்தை பற்ற வைத்தார். அதைத் தொடர்ந்து வாய்ஸ் ஆப் உமன் என்னும் அமைப்பு அங்குள்ள நடிகைகள் சந்திக்கும் பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி இருக்கிறது.

Samantha

அந்த குழு தங்கள் விசாரணையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு அறிக்கையாக தெலுங்கானா முதன்மைச் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர். அதிலும் சில உச்சநட்சத்திரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பல வருடங்கள் முன்னரே நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவின் பல பிரபலங்கள் குறித்து இணையத்தில் பதிவிட்டு வைரல் ஆக்கினார்.

இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்

அது மட்டுமல்லாமல்  தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் கலந்து கொண்ட நடிகை விசித்ரா தெலுங்கு சினிமாவில் தான் அனுபவித்த பாலியல் அத்துமீறல் குறித்தும் பேசி இருப்பார். இதனால் இந்த அறிக்கையில் உச்ச நட்சத்திரங்கள் பலரின் பெயர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சினிமா உலகங்கள் ஒன்றொன்றாக பிரச்சனையில் சிக்கி வரும் நிலையில் இது விரைவில் கோலிவுட் பக்கமும் திரும்பும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி நடந்தால் தமிழக ரசிகர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் எனவும் கேள்வி எழுந்து வருகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top