Connect with us
venkat-prabhu

Cinema News

அஜித்தும் நானும் இததான் நினைச்சுட்டு இருக்கோம்! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

Actor Ajith: இன்று ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் வெங்கட் பிரபுவை நம்பி தான் இருக்கிறார்கள். ஏனெனில் விஜய்யை வைத்து அவர் எடுத்த கோட் திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. விஜயின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் லியோ திரைப்படம் அந்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை .வசூலில் எப்பவும் போல விஜய் சக்கரவர்த்தியாக இருந்தாலும் விமர்சனத்தில் லியோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: மகளாக ராமமூர்த்திக்கு பாக்கியா செய்த விஷயம்.. கண்ணீர் வர வைக்கும் பாக்கியலட்சுமி புரோமோ..

அதன் பிறகு அவர் நடித்து வெளியாகும் திரைப்படம் கோட். இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுவும் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க வெங்கட் பிரபு சொல்லும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு இடையே ஒரு கூஸ்பம்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த அளவுக்கு வெங்கட் பிரபு இன்று அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரு காரணமாக இருந்தவர் அஜித். சென்னை 600028 திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது அஜித்தே வெங்கட் பிரபுவிடம் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என சொல்லப் போய் அனைவரும் அந்த நேரத்தில் சின்ன பசங்க கூட அஜித் படம் பண்ண போகிறாரே என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது.

இதையும் படிங்க: எஸ்.கே.வுக்கு போட்டியா வரும் கவின்!.. பிளடி பெக்கர் ரிலீஸ் தேதிய சொல்லிட்டாங்களே!…

ஆனால் அதை எல்லாம் மீறி வெங்கட் பிரபுவின் மீது நம்பிக்கை வைத்து அஜித் வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம் பெரிய அளவில் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. அஜித்துக்கும் அது ஐம்பதாவது திரைப்படமாக அமைந்து பெரிய வெற்றியைப் பெற்றாலும் வெங்கட் பிரபுவை தலை நிமிர வைத்த படமாக மங்காத்தா திரைப்படம் அமைந்தது.

அதிலிருந்து வெங்கட் பிரபுவின் மீது ஒரு தனி மரியாதை தமிழ் சினிமாவில் எழுந்தது என்ற சொல்லலாம். அதன் பிறகு மாநாடு என்ற மற்றொரு வெற்றி படத்தை வெங்கட் பிரபு கொடுக்க லோகேஷ் கனகராஜை எப்படி கொண்டாடினார்களோ அதே போல் வெங்கட் பிரபுவையும் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இதையும் படிங்க: ரஜினி பேரே மாஸா இருக்கே!.. வெளியான கூலி புது போஸ்டர்!.. அந்த நம்பர் என்ன குறியீடா?!..

இந்த நிலையில் அஜித் வெங்கட் பிரபு இணையும் மங்காத்தா 2 திரைப்படம் வெளிவருமா என்ற ஒரு கேள்வி அனைவர் மனதிலும் இருந்து வருகிறது. இதற்கு முந்தைய பேட்டிகளில் வெங்கட் பிரபுவே ஒரு சமயம் மங்காத்தா 2 எடுப்பதாக ஒரு ஐடியா இருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஆனால் சமீபத்திய பேட்டியில் மங்காத்தா 2 கண்டிப்பாக வெளிவராது. ஆனால் நானும் அஜித் சாரும் திரும்பவும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம். அது ஒரு பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என நானும் நினைக்கிறேன். அஜித் சாரும் நினைக்கிறார் .அதனால் அது எப்பொழுது வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறி இருக்கிறார் வெங்கட் பிரபு.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top