Cinema News
மாரிசெல்வராஜ், ரஜினி காம்போ அவ்வளவு தானா… நெல்சனை சமாளித்த சன்பிக்சர்ஸ்
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ல் ரிலீஸ் ஆகிறது. தொடர்ந்து லோகேஷின் இயக்கத்தில் அவரது கூலி படமும் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. நடுவில் ஜெயிலர் 2க்கான திரைக்கதையும் தயார் என்று செய்தி வந்தது. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
மாரி செல்வராஜ் உடன் ரஜினி இணையப் போறது மேக்சிமம் இருக்காது. கதை எல்லாம் கேட்குறாங்க. ஆனா அது நகரவே இல்லை. கவித்துவமான படங்களை எடுக்குறவர். கமர்ஷியல் படங்களுக்குத் தான் கிராக்கி. ரஜினி அவருக்காக மாறப்போறது இல்ல. மாரி செல்வராஜூம் ரஜினிக்காக மாற மாட்டார். அதனால மாரிசெல்வராஜ் உடன் படம் பண்ண வாய்ப்பு இல்லை.
கூலியே இப்போ தான் படம் தொடங்கி இருக்காங்க. வேட்டையன் வருது, அடுத்து கூலி வரப்போகுது. அது வரைக்கு நெல்சன் ஜெயிலர் 2 படத்துக்கு வெயிட் பண்ணனுமான்னு கேட்டபோது அந்தனன் சொன்ன பதில் இதுதான்.
அது தான் லைன் அப். ஏற்கனவே இவ்வளவு தூரம் லேட்டாகுது. நடுவுல வேற தெலுங்கு படம் பண்ணிட்டு வந்துடலாம்னு நினைச்சிக் கேட்டாரு. ஆனா சன்பிக்சர்ஸ் ஜெயிலர் படத்தையே டெவலப் பண்ணுங்க. யோசிக்கவே யோசிக்காதீங்க.
ஆபீஸ் போட்டுக் கொடுக்கறோம்னு மிகப்பெரிய சம்பளம் போட்டுக் கொடுத்துருக்காங்களாம். ஜெயிலர் ஹிட்டுக்குப் பிறகு இந்தப் படம் வருவதால அப்படிக் கொடுத்துருக்காங்க.தெலுங்கு படத்துக்கான சம்பளத்தையும் சேர்த்துக்கூட கொடுத்துருப்பாங்க போல.
ஜெயிலர் விக்ரம் மாதிரி இருக்கக்கூடாதுன்னு பண்ணுனாங்க. கூலி ஜெயிலர் மாதிரி இருக்கக்கூடாதுன்னு பார்த்துப் பார்த்துப் பண்றாங்களான்னு கேட்டதுக்கு கூலிக்கு அந்த நெருக்கடி இருக்காது. ஆனா ஜெயிலர் 2 படம் ஜெயிலர் முதல் பாகத்தோட தொடர்ச்சி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Also read: கோட் படத்துல SK, திரிஷா….மிச்சம் மீதி உள்ள சஸ்பென்ஸையும் உடைத்த பிரபலம்
சமீபத்தில் மாரிசெல்வராஜ் இயக்கிய உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வாழை படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்து வருகிறது.