Connect with us
vijay 2

Cinema News

இதுதான் மரியாதை! சூர்யா அளவுக்கு அஜித், விஜய், விக்ரம் இல்லையே.. ஆனா கொண்டாடுறது?

Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஹீரோவாக தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் பல சறுக்கல்களை சந்தித்து இன்று ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக மாறி இருக்கிறார். தற்போது அவருடைய நடிப்பில் கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் என சொல்லப்பட்ட நிலையில் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வருவதால் ரஜினியை எதிர்த்து நான் நிற்பதா என்ற ஒரு நல்ல எண்ணத்தில் அந்த ரிலீஸ் தேதியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் சூர்யா.

இதையும் படிங்க: பாலியல் புகார்!.. நடிகர்களுக்கு முதுகெலும்பே இல்லை!.. விளாசிய நடிகை!…

இது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் சூர்யா மீது இன்னும் ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களிடம் ஒரு அன்பையும் கருணையும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மாதிரி விஷயங்களை செய்யக்கூடியவர் இல்லை சூர்யா. அவர் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக பல உதவிகளை செய்து வருகிறார்.

அது மட்டும் அல்லாமல் ரசிகர்களுடன் ரசிகராக இருந்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொண்டு வருகிறார். ஒரு பக்கம் அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் வீட்டில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளானாலும் துக்கமானாலும் முதல் ஆளாக இருப்பவர் சூர்யா.

இதையும் படிங்க: விஜயகாந்த்தான் நடிக்கனும்னு கட்டாயம் ஏன்! அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்

nadarajan

nadarajan

நேராக அந்த ரசிகர் வீட்டுக்கே சென்று தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகிறார். இவர் மாதிரி எந்த ஒரு முன்னணி நடிகர்களும் ரசிகர்களின் வீட்டுக்கு நேராக சென்று கலந்து கொண்டதில்லை. இந்த நிலையில் இன்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான நடராஜன் இறந்ததை அறிந்து அவருடைய இல்லத்திற்கு சென்று தன்னுடைய அஞ்சலியை செலுத்தி இருக்கிறார் சூர்யா.

நடராஜன் சூர்யா நடித்த வேல் திரைப்படத்தை தயாரித்தவர். அதே சமயம் விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித் நடித்த ஆழ்வார், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் போன்ற படங்களையும் தயாரித்து இருக்கிறார். சிட்டிசன் படத்தில் வில்லனாக வக்கீல் வேடத்தில் நடித்திருப்பார். ஒரு பரிச்சயமான முகம் என்றே சொல்லலாம். அதனால் வேறு யாரும் போகாத நிலையில் சூர்யா அவருடைய உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: மாநாடு ஃப்ளைட் சீன்னில் நடந்த குளறுபடிகள்… சிம்புவை போட்டு படுத்திய வெங்கட்பிரபு

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top