Cinema News
கோட் முதல் நாள் வசூல் எவ்வளவு?… கடைசி நேரத்தில் காலை வாரிய ஹிந்தி வெர்சன்!..
Goatr: வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. விஜய் அரசியலுக்கு போகப்போவதாகவும், அடுத்து ஒரு படத்தில் மட்டுமே நடிக்கப்போவதாகவும் அறிவித்துவிட்ட நிலையில் இப்படத்தை காண விஜய் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
பல தியேட்டர்களிலும் விஜய் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டமாக இருந்தது. கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்த நிலையில், தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் அனுமதி கிடைக்காமல் ரசிகர்கள் அப்செட்டாக இருந்தாலும் கடைசி நேரத்தில் அனுமதி கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோட் படத்தை பார்க்கப் போனா நீங்கதான் ஆடு!.. மண்ட பத்திரம்!.. புளூசட்டமாறன் விமர்சனம்!…
அதன்படி தமிழகம் முழுவதும் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படம் 400 கோடி செலவில் உருவாகியிருப்பதாகவும் உலகமெங்கும் ஆயிரம் கோடி வரை வசூல் செய்யும் என பலரும் சொன்னார்கள். ஆனால், அது நடக்காது என்றே சொல்கிறார்கள்.
அதற்கு காரணம் ஒரு திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் வெற்றி பெற வேண்டும். பாகுபலி, கேஜிஎப், புஷ்பா படமெல்லாம் அப்படித்தான் ஹிட் அடித்தது. ஆனால், கோட் படம் ஹிந்தி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகவில்லை.
அதற்கு காரணம் ஹிந்தி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகும் படங்களை 8 வாரத்திற்கு பின்னரே ஓடிடியில் வெளியிட முடியும். ஆனால், கோட் படம் 4 வாரங்களில் ஓடிடிக்கு வரவிருக்கிறது. எனவே, ஹிந்தி மல்பிடிபிளக்ஸ் தியேட்டர்கள் கோட் படத்தை அங்கே வெளியிடவில்லை. அர்ச்சனா கல்பாத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் போய்விட்டது.
எனவே, கோட் படத்தின் முதல் நாள் வசூல் அடிவாங்கிவிட்டது. விஜயின் லியோ படமும் இதே பிரச்சனையைத்தான் சந்தித்தது. ஆனாலும், இந்திய அளவில் கோட் படம் நேற்று ஒரு நாளில் 25.55 கோடி வசூல் செய்ததாக சில இணையதளங்களில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். எப்படியும் 2 நாட்கள் வார இறுதி விடுமுறை இருப்பதால் வசூலை அள்ளுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அஜீத் ரசிகர்களை சுண்டி இழுத்த கோட்… பிரபலம் சொன்ன அந்தத் தகவல்