Cinema News
முதல் நாள் வசூலே இவ்வளவு கோடியா?!. உலக அளவில் மாஸ் காட்டும் கோட்!…
Goat: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் கோட். செப்டம்பர் 5ம் தேதியான நேற்று இப்படம் உலகமெங்கும் வெளியாந்து. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டாட்டமாக இருந்தாலும் பொதுவான ரசிகர்களை இப்படம் 100 சதவீதம் கவரவில்லை என்றே சொல்லலாம்.
அதற்கு காரணம் முதலில் படத்தின் கதையே பலருக்கும் புரியவில்லை. ஹாலிவுட் பட பாணியில் வெங்கட்பிரபு உருவாக்கிய கதை பலருக்கும் குழப்பத்தை கொடுத்திருக்கிறது. அடுத்து படத்தின் 3 மணி நேர நீளம் ரசிகர்களை அயர்ச்சி அடைய வைப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கோட் முதல் நாள் வசூல் எவ்வளவு?… கடைசி நேரத்தில் காலை வாரிய ஹிந்தி வெர்சன்!..
அப்பா மகன் என விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் வயது குறைவாக காட்டப்படும் விஜயின் தோற்றம் பலருக்கும் திருப்தியை கொடுக்கவில்லை. அதோடு, படத்தின் 2ம் பாதி போரடிப்பதாக பலரும் சொல்கிறார்கள். 2ம் பாதி இன்னும் விறுவிறுப்பாக எடுத்திருந்தால் கோட் ஒரு விறுவிறுப்பான கமர்ஷியல் படமாக வந்திருக்கும் என சொல்கிறார்கள்.
கோட் திரைப்படம் 400 கோடி செலவில் உருவாகி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் வெளியாகியிருக்கிறது. ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் மல்டிபிளக்ஸ் தவிர மற்ற சின்ன தியேட்டர்களில் மட்டும் படம் ஹிந்தியில் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், படம் வெளியாகி ஒரு நாள் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் வசூல் என்ன என பார்ப்போம். தமிழகத்தில் 23.87 கோடியும், ஆந்திராவில் 3.06 கோடியும், கர்நாடகாவில் 8.24 கோடியும், கேரளாவில் 5.95 கோடியும், வட மாநிலங்களில் 1.69 கோடியும், வெளிநாடுகளில் 34.12 கோடியும் என மொத்தம் 76.93 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் மழை காரணமாக எதிர்பார்த்த வசூல் இல்லாமல் போய்விட்டது. அதெநேரம், வெளிநாடுகளில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத வகையில் கோட் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் கோட் பெற்ற வசூலை விட அங்கு அதிக வசூல் கிடைத்திருக்கிறது. சனி, ஞாயிறு என தொடார்ந்து வார இறுதி விடுமுறை நாட்கள் வருவதால் கோட் படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோட் படத்தை பார்க்கப் போனா நீங்கதான் ஆடு!.. மண்ட பத்திரம்!.. புளூசட்டமாறன் விமர்சனம்!…