Connect with us
mgr

Cinema News

எம்ஜிஆர் காலத்துல இந்த சுதந்திரமே இல்ல! பாலியல் பிரச்சினை குறித்து பிரபலம் சொன்ன தகவல்

MGR:  மலையாள சினிமாவை மொத்தமாக சுருட்டி போட்டிருக்கிறது ஹேமா கமிட்டி. பெரிய பெரிய நடிகர்கள் இந்த பிரச்சினையில் சிக்கி மாட்டிக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக நடிகர் நிவின் பாலியின் பெயரும் சிக்கியது. ஆனால் என்னை நிருபிக்க எந்த எல்லைக்கும் போவேன் என நிவின் பாலி அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதே சமயம் துபாயில் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததாக நிவின் பாலி மீது சம்பந்தப்பட்ட பெண் புகார் கொடுக்க அந்த தேதியில் நிவின் பாலி கொச்சியில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது, அதனால் கொஞ்சம் பெருமூச்சு விட்டிருக்கிறார் நிவின் பாலி. மலையாள சினிமாவின் இந்த பிரச்சினை இப்போது கோலிவுட்டிலும் எதிரொலித்திருக்கிறது.

இதையும் படிங்க: வேட்டையனுடன் கங்குவா மோதாததுக்கு இதுதான் காரணமா? பின்னணியில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

துணை நடிகைகள் பெரும்பாலானோர் இதை பற்றி பரவலாக பேசி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தோண்டினால் நிறைய பேர் சிக்குவார்கள் என்றும் சூசகமாக கூறி வருகிறார்கள். இதில் பாலா அடித்து துன்புறுத்துவதையும் பற்றி பேசியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக வலைப்பேச்சு அந்தணன் பல விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது பிரச்சினை நடக்கும் போதே ஏன் வெளியில் சொல்லவில்லை. சுமார் 10 அல்லது பல வருடங்களுக்கு முன்பாக இந்த மாதிரி பிரச்சினை நடந்திருக்கும். தப்பு செய்தவனே எல்லாவற்றையும் நினைத்து வருந்தி ஒரு ஆன்மீகவாதியாக நல்லவனாக மாறியிருப்பான்.

இதையும் படிங்க: இது போதுமா?.. இன்னும் கொஞ்சம் வேணுமா?!.. நீச்சல் குளத்தில் மஜா பண்ணும் ஆண்ட்ரியா…

நல்லவனாக மாறிய பிறகு அவன் மீது இப்படி ஒரு பழியை போட்டால் எப்படி? அன்றைக்கே செய்திருக்க வேண்டும் அல்லவா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால் பரவாயில்லை. சினிமா இப்போது மாறியிருக்கிறது. இந்த மாதிரி பிரச்சினையை வெளியில் சொல்ல நடிகைகள் துணிந்து வருகிறார்களே?

எம்ஜிஆர் காலத்தில் இந்த சுதந்திரமே இருக்காது. அப்படியே வெளியே சொன்னாலும் என்ன நடக்கும் என்பதே தெரியாது. அதனால் பல விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது அந்த காலத்தில் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அட்லி மட்டும் பண்ணலாம்!. நான் செஞ்சா தப்பா?!.. கோட் படம் பற்றி பொங்கிய விபி!…

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top