Cinema News
2 நாள் வசூல் எவ்வளவு?!.. பாக்ஸ் ஆபிசில் கோட் ஆக மாறிய தளபதி!..
Goat Collection: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்தான். அஜித்துக்கு மங்காத்தா கொடுத்த வெங்கட்பிரபு விஜயுடன் இணைந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது. மேலும், ஹாலிவுட் பட பாணியில் விஜயை இளமையாக காட்ட போகிறார்கள், அதற்கு ஏஜிங் தொழில்நுட்பத்தில் விஜய் வருகிறார் என சொல்லவும் விஜய் ரசிகர்கள் உற்சாகமானார்கள்.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது. பல வருடங்களுக்கு பின் விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். மேலும், விஜயோடு பிரசாந்த், பிரபுதேவா என பலரும் நடிக்கிறார்கள் என சொல்லி ஹைப்பை ஏத்திவிட்டார்கள். சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு! ஈகோ இல்லாத ஆளுப்பா
சில சண்டை காட்சிகள் வெளிநாட்டிலும் எடுக்கப்பட்டது. ஹாலிவுட் ஸ்டைலில் ஆக்சன் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் இருக்கும் என வெங்கட்பிரபு சொன்னார். இந்நிலையில்தான், கடந்த 5ம் தேதி இப்படம் வெளியானது. விஜய் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ஃபுல் மீல்ஸாக இருந்தது.
ஏனெனில், ஏற்கனவே ஹிட் அடித்த பல படங்களின் ரெஃப்ரன்ஸ் இப்படத்தில் இருந்தது. மேலும் ஏஐ மூலம் விஜயகாந்தை கேமியோ வேடத்தில் கொண்டு வந்தனர். அதோடு, சிவகார்த்திகேயனும் ஒரு காட்சியில் வந்தார். இதனால் தியேட்டரில் ரசிகர்கள் உற்சாகமானார்கள்.
அதோடு, இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். எனவே, தியேட்டர்களில் கூட்டம் களை கட்டியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியானது. ஒருபக்கம், வெளிநாடுகளிலும் கோட் படத்திற்கு நல்ல வசூலை பெற்றது. படம் வெளியான முதல் நாளில் இப்படம் 126 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே அறிவித்தார்.
இரண்டாம் நாளில் இப்படம் எப்படியும் 100 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2 நாலில் 226 கோடி வசூலை இப்படம் தாண்டியிருக்கும் என கணிக்கப்படுகிறது. அடுத்து சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை வருவதால் இப்படம் இன்னும் 2 நாட்களில் கோட் படம் 400 கோடியை தாண்டிவிடும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலரிடம் மண்ணை கவ்விய கோட் வசூல்… இத நோட் பண்ணுங்க? ஷாக்கிங் ரிப்போர்ட்