Connect with us

Cinema News

ஏர்போர்ட்டிலேயே அலப்பறையா? ரஜினிகாந்த் வில்லனை கட்டம் கட்டி தூக்கிய போலீசார்

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்துக்கு மாஸ் வில்லனாக அமைந்த நடிகர் தற்போது ஏர்போர்ட்டில் கூட்டிய அலப்பறையால் தற்போது காவல்துறையில் சிக்கி இருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மலையாளத்தில் மாஸ் நடிகராக இருந்தவர் விநாயகன். இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு இணையான கேரக்டரில் கலக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையும் படிங்க: கோட் படத்தோட வெற்றி ரகசியம் இதுதானாம்… அப்படி என்னப்பா இருக்கு படத்துல?

தொடர்ந்து, மலையாளத்தில் நடித்து வந்தாலும் தமிழில் சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவே இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ஹிட் படமாக வெளிவந்தது ஜெயிலர். இப்படத்தில் அவருக்கு இணையான மிரட்டல் நடிப்பை கொடுத்து அசத்தினார்.

Vinayakan

நடிப்பில் கொடி கட்டி பறந்தாலும் இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சர்ச்சைகளை மட்டுமே சந்தித்து வருகிறார். அந்தவகையில், திருவனந்தபுரத்தில் இருந்து கோவா செல்ல விமான நிலையம் சென்று இருக்கிறார். அப்போது இணைப்பு விமானத்துக்கு ஹைதராபாத்தில் இருந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித்தை சீண்டிய ஏஜிஎஸ்… ட்விட்டரில் வச்சி செய்யும் ரசிகர்கள்… நல்லாவா இருக்கு இதெல்லாம்?

அந்த நேரத்தில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போ அவரை பரிசோதனை செய்த சிஐஎஸ்எஃப் காவலர்களிடம் சண்டையிட்டு தள்ளுமுள்ளாகி இருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையிட்டதால் அவர் உடனே கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்னரும், கடந்த ஆண்டு குடும்ப பிரச்னை காரணமாக கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமல்லாமல் பெண் கவிஞரை தரக்குறைவாக பேசியதால் கைது செய்யப்பட்டதை அடுத்து பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தமிழ் ரசிகர்களிடம்  பெயர் பெற்று இருக்கும் நிலையில் விநாயகன் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top