Connect with us
suchi

Cinema News

ஜீவா ஓடுன கதையெல்லாம் இருக்கு! வெளிச்சம் போட்டு காட்டிய சுசித்ரா

Jeeva: மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதைப்பற்றி பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது 4 வருடத்திற்கு முன்பே செயல்பட்டு வந்த ஹேமா கமிட்டியின் மூலம் பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன.

ஆனால் இப்போது யார் அந்த நடிகர்கள் என்ற பெயரை குறிப்பிடாமலேயே ஆளாளுக்கு ஒரு ஒரு கதையை உருவாக்கி அதை பெரிதுபடுத்தி வருகின்றனர். அதாவது வயநாட்டில் என்ன நடக்கிறது கொல்கத்தாவில் என்ன நடக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தை தூக்கிக் கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோட் படத்துல இத்தனை படங்கள் காப்பியா? அரசியலுக்கு வரப்போற விஜய் இப்படி நடிக்கலாமா?

அதுவும் நடிகர்களின் பெயரை குறிப்பிடாமலேயே ஆளாளுக்கு கற்பனை செய்து கொண்டு ஒரு ஒரு கதையை எழுதி வருகின்றனர். இது எல்லாமே பல முக்கிய பிரபலங்களை காப்பாற்றும் நோக்கில் தான் இப்படி ஒரு பிரச்சனையை இப்போது கிளப்பி இருக்கின்றனர்.

மோகன்லால் ஆயிரம் பேர் கூறிய மேடையில் அதுவும் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டு  ஒரு தவறான கை செய்கையை காட்டியது அப்படியே மறைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்களும் அவரை காப்பாற்றுவதற்காகவே அதை பெரிது படுத்தாமல் இருந்திருக்கின்றனர். இந்த ஒரு தைரியம் தான் அடுத்தடுத்து பல தவறுகளை செய்ய தூண்டுகின்றன.

இதையும் படிங்க: ஒரே படத்துல ரஜினி, அஜீத் ரசிகர்களைக் கொண்டாட வைத்த விஜய்… தலைவருன்னா சும்மாவா!

அவரைப் பற்றிய புகாருக்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால் நிவின் பாலி, ஃபகத் பாசில் இவர்களெல்லாம் இந்த ஒரு வலையில் சிக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் அவர்களைப் பொறுத்த வரைக்கும் இந்த மாதிரி விஷயம் என்பது அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒன்று.

பல நடிகைகளை பார்த்து இவர்களெல்லாம் ஓடிய கதை எனக்குத் தெரியும். பல நடிகைகள் நிவின் பாலி மீதும் ஃபகத் பாசில் மீதும் வந்து விழுவார்கள். எந்த ஒரு பார்ட்டிக்கு போனாலும் நூறு பேர் இவர்களை துரத்திக் கொண்டு வருவார்கள். அந்த நடிகைகளை பார்த்து இவர்கள் ஓடிய கதை எல்லாம் இருக்கிறது.

இதையும் படிங்க: பால் கொழுக்கட்ட கணக்கா இருக்குறியே தமன்னா!.. போட்டோஸ் பார்த்து உருகும் ரசிகர்கள்!…

ஏன் ஜீவா கூட இப்படித்தான். பிரபல விஜே ஒருவரின் டார்ச்சரால் பயந்தே ஓடி இருக்கிறார். அந்த விஜே பல சினிமா பிரபலங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால் இந்த மாதிரி இளம் நடிகர்களுக்கும் இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கிறது.  நிவின் பாலி, ஃபகத் பாசில் இவர்கள் மீது இப்போது இந்த குற்றச்சாட்டு வந்திருக்கிறது என்றால் அதற்கெல்லாம் அந்த கிழட்டு நடிகர்கள்தான் காரணம் என மோகன்லாலை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் சுசித்ரா.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top