இமானை மிரட்டினார் சிவகார்த்திகேயன்!. அதனால்தான் சொன்னோம்!.. வலைப்பேச்சு பகீர்!…

Published on: September 9, 2024
imman
---Advertisement---

Sivakarthikeyan: சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமான் ஒரு பேட்டியில் ‘சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்தார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவரை மன்னிக்கவே மாட்டேன். இனிமேல் அவரின் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்’ என சொன்னார். அவர் அப்படி பேட்டி கொடுப்பதற்கு முன்பே இமானின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயனே காரணம் என ஊடகங்களில் கிசுகிசுக்கள் வெளியானது.

வலைப்பேச்சி யுடியூப் சேனலிலும் பெயரை சொல்லாமல் கிசுகிசு போல அதை சொன்னார்கள். இமான் வெளிப்படையாக சொன்னதும் அது பற்றிகொண்டது. இதில், பெரும்பலானோரின் ஆதரவு இமான் பக்கம் இருந்தது. சமூகவலைத்தளங்களில் பலரும் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதன்பின், அந்த வீடியோவை யுடியூப்பிலிருந்து நீக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்தார் எனவும், இணையக் கூலி படைகளை வைத்து அந்த விவகாரம் டிரெண்டிங்கில் வராமல் பார்த்துகொண்டார் எனவும் செய்திகள் வெளியானது. பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறனும் அதே கருத்தை சொன்னார். அவரும் எஸ்.கே-வை கடுமையாக விமர்சித்தார்.

ஆனால், சிவகார்த்திகேயன் இதுபற்றி எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதியாகவே இருந்தார். அதோடு, தனக்கு 3வது குழந்தை பிறந்த செய்தியை வெளியிட்டு தனது மனைவியுடன் தான் மகிழ்ச்சியாகவே இருப்பது போல் காட்டிக்கொண்டார். இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மியிடம் வாசகர் கேட்ட கேள்வியில் ஒரு முக்கிய தகவல் வெளிவந்திருக்கிறது.

vijay3
bismi

‘நான் சிவகார்த்திகேயன் ரசிகன். அவரின் சொந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்களை நீங்கள் ஏன் வெளியே சொன்னீர்கள்?’ என்பதுதான் அந்த் கேள்வி. அதற்கு பதில் சொன்ன பத்திரிக்கையாளர் பிஸ்மி ‘வலைப்பேச்சில் ஒருவரின் சொந்த வாழ்க்கை பற்றி பேசமாட்டோம். இமான் சொல்வதற்கு முன்பே பெயரை சொல்லாமல் கிசுகிசு போலவே அதை சொன்னோம். இமான் பேட்டியில் அதை சொன்னபோது அவரை போனில் தொடர்பு கொண்ட சிவகார்த்திகேயன் அந்த வீடியோவை நீக்க சொல்லி மிரட்டியது போலவும், கெஞ்சியது போலவும் பேசியிருக்கிறார்.

இந்த தகவலை இமான் என்னிடம் சொன்னார். அவர்தான் பாதிக்கப்பட்டவர். எனவே, வலைப்பேச்சி அவரின் பக்கம் நிற்க வேண்டும் என முடிவெடுத்தே சிவகார்த்திகேயன் பற்றி வெளியோ சொன்னோம்’ என அவர் சொல்லி இருந்தார்.

இதையும் படிங்க: OTT-க்கு வரும் GOAT… ரன் டைம் ‘இத்தனை’ மணி நேரமா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.