Cinema News
50 மணி நேரம் ரஜினி புகழ் பாடிய ஆர்.ஜே.விக்னேஷ்!.. மனம் உருகி வாய்ஸ் நோட் போட்ட சூப்பர்ஸ்டார்.
Rajinikanth: தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா அளவில் தலைவர் மற்றும் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இந்தியா மட்டுமல்ல. உலக அளவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் இவருக்கு ஜப்பானிலும் ரசிகர்களை உருவாக்கியது.
இப்போது ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும்போது ஜப்பானிலிருந்து சில ரசிகர்கள் சென்னை வந்து அவரின் படத்தை பார்த்துவிட்டு போகிறார்கள். கடந்த 50 வருடங்களாக சினிமாவில் இயங்கி வருகிறார் ரஜினி. அபூர்வ ராகங்கள் தொடங்கி கூலி வரை 171 படங்களில் நடித்திருக்கிறார் ரஜினி.
இதையும் படிங்க: அண்ணாத்த படத்தில் நயன் இல்ல.. நாங்கதான் மெயின்னா இருந்தோம்.. குஷ்பு சொன்ன ஆச்சரிய தகவல்
தனக்கென ஒரு தனி உடல் மொழி, வசனம் உச்சரிப்பு, ஸ்டைல் என ரசிகர்களை கவர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பின் இவருக்குதான் அதிக ரசிகர்கள் உருவானார்கள். துவக்கம் முதலே ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். இவரின் படங்கள் வசூலில் பட்டையை கிளப்ப சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். 72 வயதிலும் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை அவரால் கொடுக்க முடிகிறது. அந்த படத்திற்கு பின் வேட்டையன் படத்தில் நடித்துவிட்டு இப்போது லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஆர்.ஜே.விக்னேஷ் என்பவர் பிளாக்ஷிப் யுடியூப் சேனலில் ரஜினியை பற்றி தொடர்ந்து 50 மணி நேரம் பேசி உலக சாதனை படைக்கப்போவதாக அறிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டார்கள். விக்னேஷும் இரண்டு பகல் மற்றும் இரண்டு இரவுகள் தொடர்ந்து ரஜினியை பற்றி பல தகவல்களை பேசினார். தற்போது அது முடிவுக்கு வந்துவிட்டது.
இதைத்தொடார்ந்து இது தொடர்பாக ‘வாய்ஸ் நோட்’ அனுப்பியுள்ள ரஜினி ‘விக்கேஷ். என்ன பத்தி 50 மணி தொடர்ந்து பேசியிருக்கீங்க.. ஹாட்ஸ் ஆப்.. உங்களை எப்படி பாராட்டுவது என்பதே எனக்கு தெரியவில்லை. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை எப்படி திருப்பி கொடுப்பது என எனக்கு தெரியவில்லை. உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.
உங்களுக்கும், உங்களின் சேனலுக்கும் என இதயம் கனிந்த பாராட்டுக்கள். உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்’ என ரஜினி பேசியிருக்கிறார்.