Cinema News
குடும்பத்தில் ஓவராக தலையிடும் மாமியார்… இப்படிலாம் செய்யலாமா? ஜெயம்ரவி விவாகரத்து பின்னணி
JayamRavi: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜெயம்ரவி தன்னுடைய 15 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டிருப்பது தான் தற்போதைய கோலிவுட் பரபரப்புக்கு காரணமாகி இருக்கிறது. இந்த விவகாரத்துக்கு பின்னணியில் காரணம் குறித்து பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
அதுகுறித்து அவர் பேசும்போது, சமுதாயத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் பிரபலங்கள் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். வாழ்க்கையை சரியாக கையாள வேண்டும். உங்களை போல ரசிகர்களும் விவகாரத்தை கையாள தொடங்கிவிடுவார்கள்.
இதையும் படிங்க: 2024ல் தமிழ் படங்கள் தவறவிட்டதை தட்டி தூக்கிய கோட்… ஒத்த ஆளு போதும்!
தற்போது ஜெயம்ரவி தன்னுடைய திருமண வாழ்க்கையை ஆர்த்தியுடன் முறித்து கொள்வதாக ஒருவழியாக அறிவித்துவிட்டார். நீதிமன்றம் படியேறி முறையாக பிரிந்துவிட்டனர். கணவன் மனைவி சண்டை என்பது சாதாரணம்தான். அதைபோலவே நான் நினைத்தேன்.
ஜெயம் ரவி ரொம்பவே கட்டுகோப்பான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் தந்தை பிரபல எடிட்டர் என்றாலும் ஜெயம் ரவிக்கு எளிதாக இந்த சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு படத்துக்கு தன்னுடைய முழு உழைப்பை கொட்டினார். பேராண்மை படத்தில் காட்டில் அட்டை பூச்சிகள் தொல்லையுடன் நடித்து கொடுத்தார்.
ரவியை தனியாக மும்பையில் படிக்க வைத்தார் எடிட்டர் மோகன். அங்கு இருப்பவர்களிடம் பழகினால் கலாச்சாரம் தெரியும் என நினைத்தாராம். அண்ணனாக ஜெயம் ராஜா ரவியின் கேரியரை தூக்கி நிறுத்தினார். அதை தொடர்ந்து ஆர்த்தியுடன் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: ஜீவாவுக்கு நடிகைகள் கொடுத்த பாலியல் தொல்லை!.. கொளுத்திப்போட்ட சுசித்ரா!…
ஆனால் ரவியின் குடும்பத்துக்கு இதில் துளியும் விருப்பமில்லையாம். சுஜாதா விஜயகுமார் 80களில் மிகப்பெரிய தயாரிப்பு குழு. மைசூர் ராஜா கொடுத்த பேளசில் தான் நிறைய படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும். இதனால் ஆர்த்தியும் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இதுவும் கல்யாண வாழ்க்கையில் நெருடலை உருவாக்கியது. சுஜாதா விஜயகுமார் தன்னுடைய பேரனை நியூயார்க் பிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்க வைக்கவும் விரும்பினாராம். இதுப்போல குடும்ப விஷயத்தில் மாமியார் தலையிட்டது இல்லாமல் கால்ஷீட் விவாகரங்களையும் தொல்லை கொடுத்தது தாங்க முடியாமல்தான் பிரிவு வரை சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.