Connect with us
jayam ravi

Cinema News

விவாகரத்து ஆன நேரம்! ஜெயம் ரவிக்கு அடிச்ச பம்பர் ஆஃபர்..அடுத்தடுத்து ஜாக்பாட்தான்

Jayam Ravi: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. முதன் முதலில் மோகன் ராஜாவின் இயக்கத்தில் ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி முதல் படத்திலிருந்து ஒரு பெரிய வரவேற்பை பெற்றார்.

இவருடைய ஹிட் லிஸ்டில் இருக்கும் முக்கியமான சில படங்கள் பெரும்பாலும் இவருடைய அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜாவின் இயக்கத்திலேயே வெளியான திரைப்படங்களாக இருக்கும். ஒரு பீரியடு வரை லவ்வர் பாயாக சார்மிங்காக நடித்து வந்த ஜெயம் ரவியை ஒரு ஆக்சன் ஹீரோவாக காட்டிய திரைப்படம் தனி ஒருவன்.

இதையும் படிங்க: தீபாவளி வேணாம்… இந்த வைரலயே ஹிட்டடிச்சிரலாம்… ஜெயம்ரவியின் பிரதர் ரிலீஸ் தேதி இதானாம்!

அந்தப் படத்தையும் எடுத்தவர் மோகன் ராஜா. அந்தப் படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. அதிலும் அபிமன்யூவாக நெகட்டிவ் ரோலில் நடித்த அரவிந்த்சாமி கதாபாத்திரம் மக்களை மிகவும் கவர்ந்தது. இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் மோகன் ராஜா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ஜெயம் ரவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன .அதனை அடுத்து பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இதையும் படிங்க: மாநாட்டிற்கு வந்த சிக்கல்! எப்படிப் போனாலும் முட்டுதே.. சிக்கலில் விஜய்

அந்த படம் தீபாவளியன்று ரிலீஸ் என சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜெயம் ரவி பிரதர் படத்தின் ரிலீஸுக்கு பிறகு அவர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

subbu

subbu

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்கள் அனைத்துமே கோலிவுட்டில் ஒரு தரமான படங்களாகவே வெளிவந்திருக்கின்றன. ரஜினியை வைத்து பேட்ட என்ற ஒரு ஆக்சன் படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இப்போது சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றார்.

இதையும் படிங்க: குடும்பத்தில் ஓவராக தலையிடும் மாமியார்… இப்படிலாம் செய்யலாமா? ஜெயம்ரவி விவாகரத்து பின்னணி

அந்த படத்தை முடித்துவிட்டு ஜெயம் ரவியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாக ஜெயம் ரவியின் திருமண வாழ்க்கை பற்றித்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அவர் தன்னுடைய மனைவியை பிரிய போவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனு கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top