கணவர் எப்படி இருக்கணும்னு ரவிக்கிட்ட கத்துக்கணும்!.. வைரலாகும் ஆர்த்தி பேட்டி!…

Published on: September 11, 2024
aarthi
---Advertisement---

ஜெயம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் ரவி. முதல் படம் ஹிட் அடித்ததால் அந்த படத்தின் அவரின் பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. துவக்கத்தில் அண்ணன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் ஹிட் அடித்த படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்து வந்த ரவி ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.

மினிமம் கேரண்டி நடிகராக மாறினார் ஜெயம் ரவி. இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது. இவர் நடிப்பில் உருவான கோமாளி திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

jayamravi

ஜெயம் ரவி ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே ரவி அவரின் மாமியார் சுஜாதா தயாரிப்பில் மட்டுமே நடித்து வந்தார். இதில் அவருக்கும், மாமியாருக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில், ஆர்த்தி அவரின் அம்மாவுக்கு ஆதரவாக நின்றதால் ஜெயம் ரவி அவரை பிரிய முடிவெடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. கிசுகிசுவாக இருந்தது இப்போது உண்மையாகவும் மாறிவிட்டது. ‘இது என் தனிப்பட்ட முடிவு அல்ல. என்னை சார்ந்திருப்பவர்களுக்காக எடுத்த முடிவு’ என சொன்ன ரவி தனது திருமணத்தை ரத்து செய்யும்படி நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துவிட்டார்.

ஆனால், ‘இது யாரைப்பற்றியும் யோசிக்கமால் ரவி எடுத்த முடிவு. என் கணவரிடம் மனம் விட்டு பேச பலமுறை முயற்சி செய்தும் நடக்கவில்லை. நானும் எனது குழந்தைகளும் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்’ என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எனவே, இது எங்கு போய் முடியும் என தெரியவில்லை.

JAYAMRAVI_AARATHI

இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு ஆர்த்தி கொடுத்த பேட்டியில் ‘நான் கர்ப்பமாக இருந்தபோது வாந்தி எடுத்தால் ரவி அதை தன் கையில் ஏந்திக்கொள்வார். நள்ளிரவு 2, 3 மணிக்கு பசியெடுக்கிறது என சொன்னால் உடனே ஓடி வருவார். ஹீரோ என்கிற எந்த பந்தாவும் என்னிடம் அவர் காட்டவே மாட்டார். ஒரு கணவர் எப்படி இருக்க வேண்டுமென அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என அதில் ஆர்த்தி ரவியை பற்றி பெருமையாக பேசியிருந்தார்.

இந்த வீடியோவைத்தான் இப்போது பலரும் இணையத்தில் பகிர்ந்து ‘இப்படிப்பட்ட ஜோடி பிரியக்கூடாது. குழந்தைகளுக்காக அவர்கள் ஒன்று சேர வேண்டும்’ என பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: டைவர்சா? எப்போ? ஜெயம் ரவி அறிக்கைக்கு ஆர்த்தி வெளியிட்ட அதிரடி பதில்!.. செம டிவிஸ்டா இருக்கே..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.