செல்போன் சுவிட்ச் ஆப்! நாட் ரீச்சபிள்.. எங்கே போனார் ஜெயம் ரவி? ஷாக்கிங் ரிப்போர்ட்!..

Published on: September 12, 2024
jayam ravi
---Advertisement---

Jayam Ravi: சமீபகாலமாகவே நடிகர்களின் திருமண வாழ்வில் விவாகரத்து என்பது அதிகரித்துகொண்டே போகிறது. ஏற்கனவே, கமல்ஹாசன், பார்த்திபன் போன்ற சிலர் மனைவியை பிரிந்து வாழ்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் யாரும் எதிர்பார்த்திராத வகையில் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி 17 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிந்து போனார்கள்.

அதன்பின் இசையமைப்பாளர் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிந்தார். இப்போது ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவெனில், தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி என எல்லோருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

இதையும் படிங்க: கோட் 1000 கோடி அடிக்காம போனதுக்கு காரணமே விஜய்தான்!.. என்னப்பா சொல்றீங்க!..

எனவே, ஒருவரை ஒருவர் புரிந்து, பிடித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி பிரிகிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. ஜெயம் படம் மூலம் அறிமுகமான ரவி அதன்பின் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தையும், ரசிகர் கூட்டத்தையும் பெற்றவர். சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் மினிமம் கேரண்டி உள்ள ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி.

அதனால்தான் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து படம் தயாரித்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாகவே ஜெயம் ரவின் படங்கள் அதிகம் ஓடுவதில்லை. அடங்க மறு மற்றும் கோமாளி படங்களுக்கு பின் 3 வருடங்கள் கழித்தே பொன்னியின் செல்வன் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: ரஜினியின் அந்த படம் சூப்பர் ஹிட்டா? எவ்ளோ லாஸ் தெரியுமா எங்களுக்கு? புலம்பிய பிரபலம்

மனைவியை பிரிவதாக அறிவித்துள்ள ஜெயம் ரவி இப்போது எங்கே இருக்கிறார் என்பது அவரின் குடும்பத்தினருக்கே தெரியவில்லை. திடீரென வருகிறாராம். 2 நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு போய்விடுகிறாராம். அதோடு, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதால் அவரின் பெற்றோர் மற்றும் நண்பர்களாலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.

அவரின் நடிப்பில் உருவான பிரதர் மற்றும் ஜெனி போன்ற படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கான புரமோஷனில் ஜெயம் ரவி கலந்து கொள்ள வேண்டும். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகிறார்கள். இதிலிருந்து ஜெயம் ரவி மீண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.