Connect with us

Bigg Boss

அந்த சீரியலை முடிச்சது இதுக்குதானா? பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் ரீல் சர்ச்சை ஜோடி…

BiggbossTamil8: பிக் பாஸ் சீசன் 8 ரியாலிட்டி ஷோ விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கி இருக்கிறது.

 தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ரியாலிட்டி ஷோக்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது பிக் பாஸ். மற்ற சீசன்களைவிட இந்த சீசன் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. 7 சீசன்களை தொகுத்து வந்த கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் செய்யும் கோபி.. சண்டையிட்டு கொள்ளும் முத்து, மீனா… பாண்டியனுக்கு பிறந்தநாள்…

அவருக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக் பாஸை தொகுத்து வழங்க வந்திருக்கிறார். இதனால் அவர் எப்படி தொகுத்து வழங்க இருக்கிறார். அவருடைய ஆட்டம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க கடந்த வருடம் போட்டியின் மிகப்பெரிய சுவாரசியத்தை குறைத்ததே போட்டியாளர்களின் தவறான தேர்வு தான். அதனால் இந்த முறை போட்டியாளர்கள் சரியாக தேர்வு செய்ய வேண்டும் என தயாரிப்பு குழு முடிவு எடுத்திருக்கிறதாம். இதனால் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் கடந்த சீசன்களில் வைரல் புகழில் இருந்த சில போட்டியாளர்களை நிகழ்ச்சிக்குள் அழைத்து வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அது மட்டுமல்லாமல் ஹிந்தி பிக் பாஸ் போல இந்த சீசன்களில் நிறைய காதல் ஜோடிகள் எண்ட்ரியும் நடக்க இருப்பதாக பேச்சு அடிப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:செல்போன் சுவிட்ச் ஆப்! நாட் ரீச்சபிள்.. எங்கே போனார் ஜெயம் ரவி? ஷாக்கிங் ரிப்போர்ட்!..

ஏற்கனவே குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற ஷாலின் சோயா. அவருடைய காதலரும், யூட்யூபருமான டிடிஎஃப் வாசன் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த விஷால் மற்றும் அக்ஷயா ஆகியோர் இந்த லிஸ்டில் இணைந்து இருக்கின்றனர்.

Arnav_anshitha

இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் செல்லமா சீரியலின் ஹீரோ அர்ணவ் மற்றும் ஹீரோயின் அக்ஷிதா ஆகிய இருவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்திருக்கிறது.

இதையும் படிங்க: ரஹ்மான்கிட்ட அத கேட்டுட்டு இப்போ வரைக்கும் ஃபீல் பண்றேன்! சூர்யாவுக்கு இப்படி ஒரு கில்டியா?

அர்னவ் மற்றும் நடிகை திவ்யாவின் திருமண வாழ்க்கையில் பிரச்சினை இணையத்தில் வெடித்தது. அந்த நேரத்தில், அக்ஷிதா திவ்யாவை அவதூறாக பேசிய ஆடியோ இணையத்தில் கசிந்த நிலையில் அவருக்கு ரசிகர்களிடம் விமர்சனம் எழுந்தது. இருந்தும் செல்லமா சீரியலில் அவர்கள் கடைசி வரை நடித்து முடித்து வைக்கின்றனர்.

இதனால் சர்ச்சையில் இருக்கும் இந்த ஜோடி போட்டிக்குள் வந்தால் மேலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மட்டுமல்லாமல் சீரியல் நடிகர் அருண் பிரசாத் நிகழ்ச்சிக்குள் வர இருப்பது ஏறத்தாழ உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top