Cinema News
லோகேஷுக்கு வந்த அதே பிரச்சனைதான் வெங்கட் பிரபுவுக்கும்!.. பாவம் திட்டு வாங்குறாரு!..
சினிமாவில் ஒரு இயக்குனருக்கான சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், பல தயாரிப்பாளர் அதை இயக்குனர்களுக்கு கொடுப்பதில்லை. எனவே, இயக்குனர்கள் நினைப்பதை எடுக்க முடியாமல் வேறு எதையோ எடுத்து படம் வேறு மாதிரி வந்துவிடும். குறிப்பாக, இத்தனை நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும்.
‘ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சி.. படத்தை சீக்கிரம் முடிச்சிடுங்க’ என ஒரு இயக்குனரிடம் தயாரிப்பாளர் சொல்லும் போது அங்குதான் பிரச்சனை துவங்கும். அவசர கோலத்தில் தான் நினைத்ததை ஒரு இயக்குனரால் எடுக்க முடியாமல் போகும். மேலும், படத்தின் தரமே குறைந்து போகும். தயாரிப்பாளரை குறை சொல்லவும் முடியாது. ஏனெனில், சினிமா அவர்களுக்கு வியாபாரம் நினைத்த தேதியில் படம் ரிலீஸாக வேண்டும்.
இதையும் படிங்க: இப்படியே போனா பிரசாந்த் நிலமைதான் ஜெயம் ரவிக்கும்!.. என்னப்பா சொல்றீங்க!…
லோகேஷ் கனகராஜ் லியோ படம் எடுத்தபோது இந்த பிரச்சனையை சந்தித்தார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படத்தை வேகமாக முடிக்கவேண்டிய நிலை. தயாரிப்பாளர் கொடுத்த அழுத்தத்தில் படத்தின் இரண்டாம் பாதியில் சொதப்பினார். அதனால் ட்ரோலில் சிக்கினார். படத்தின் இரண்டாம் பாதி நன்றாக இல்லை பலரும் சொன்னார்கள். லோகேஷும் அதை ஏற்றுக்கொண்டார்.
கோட் படத்தில் வெங்கட்பிரபுவும் அதே பிரச்சனையை சந்தித்திருக்கிறார். விஜய் நடிப்பில் கோட் படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவானது. விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த பல வேலைகளையும் வெங்கட்பிரபு செய்திருந்தார். ஆனாலும், படத்தில் விஜயை இளமையாக காட்டும் காட்சிகளில் ஏஜிங் டெக்னாலஜி சரியாக செய்யப்படவில்லை என்கிற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இதுபற்றி பேசிய வெங்கட்பிரபு ‘நான் கெட்டது எல்லாவற்றையும் தயாரிப்பாளர் செய்து கொடுத்தார். பல இடங்களில் இப்படத்தை எடுத்தோம். துடிசியா, ரஷ்யா, இஸ்தான்பூல் என பல நாட்டுக்கு போனோம்.. கோட படத்தில் தாய்லாந்து காட்சிகளை நான் ஜப்பானில் எடுக்க திட்டமிட்டேன். ஆனால், அது தாமதமாகும் என்பதால் எடுக்கவிலை.
இன்னும் 2 மாதங்கள் கிடைத்திருந்தால் கிராபிக்ஸ் காட்சிகளை இன்னும் சிறப்பாக செய்திருப்பேன். குறிப்பாக சிறு வயது விஜயை இன்னும் சிறப்பாக கொண்டு வந்திருப்பேன். ஆனால், படத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதால் அது முடியாமல் போய்விட்டது’ என சொல்லி இருந்தார்.
இதையும் படிங்க: ‘தளபதி 69’க்கும் யுவன்தான் மியூஸிக்கா? ஒரு தடவ பட்டது போதாதா? வைரலாகும் செய்தி