Lokesh kanagaraj: லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படத்தில் தற்போது நிறைய சுவாரசிய சம்பவங்கள் நடந்து வருகிறது. அது குறித்த மற்றும் ஒரு தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் பரபரப்பாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வேட்டையன் திரைப்படத்தை முடித்துவிட்டு கூலி திரைப்படத்தின் சூட்டிங் இணைந்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இப்படியே போனா பிரசாந்த் நிலமைதான் ஜெயம் ரவிக்கும்!.. என்னப்பா சொல்றீங்க!…
இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறி இருக்கும் அனிருத் தான் கூலி திரைப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னர் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் அவர்களின் கேரக்டர் பெயர்களுடன் தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் மலையாளத்திலிருந்து ஷாபீன் ஷபீர், தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, தமிழிலிருந்து சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இவர்கள் மட்டுமல்லாது தற்போது கன்னடாவில் இருந்து இன்னொரு பிரபலத்தையும் படக்குழு களமிறக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: ‘தளபதி 69’க்கும் யுவன்தான் மியூஸிக்கா? ஒரு தடவ பட்டது போதாதா? வைரலாகும் செய்தி
நடிகர் உபேந்திரா ராவ் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருவதாக அவரை தன்னுடைய பேட்டி ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இவர் இதற்கு முன் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சத்தியம் திரைப்படத்தில் முக்கிய இடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் அளித்திருந்த பேட்டியில், என்னை வந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்தித்து படத்தின் ஒன் லைனை கூறினார். நான் உடனே அவரை நிறுத்துங்க. நீங்க எனக்கு இனிமே எதுவும் சொல்ல வேணாம். நான் கண்டிப்பா இந்த படத்தில் நடிக்கிறேன் எனக் கூறிவிட்டாராம்.
இதையும் படிங்க: லோகேஷுக்கு வந்த அதே பிரச்சனைதான் வெங்கட் பிரபுவுக்கும்!.. பாவம் திட்டு வாங்குறாரு!..
ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் யார்தான் வேண்டாம் எனக் கூறுவார்கள். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். அவர் அருகில் நின்றாலே போதும். ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் தான் எனவும் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உபேந்திரா பேட்டியைக் காண: https://x.com/kollycorner/status/1834141952121397614
