நடிகர்களில் தி பெஸ்ட் அஜித்தான்! யார்கிட்டயும் இல்லாத ஒரு குணம்.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்

Published on: September 13, 2024
ajithnews
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு பெரிய உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஒரு ஆக்சன் ஹீரோவாக சமீப கால ஆக்சன் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்திருக்கிறார். யாரும் எளிதாக தொட முடியாத ஒரு இடத்தில் இருக்கிறார் அஜித். அவருடைய லைஃப் ஸ்டைலும் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.

பெரும்பாலும் தனியாகவே பயணிப்பது என தனக்கு பிடித்தமான வேலையை செய்து கொண்டு தனக்கான ஒரு வாழ்க்கையை வாழும் ஒரு மனிதராகவே சமீப காலமாக காணப்படுகிறார் அஜித். அதே நேரம் குடும்பத்தை ஷாலினி கவனித்துக் கொள்ள வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் அஜித் அவ்வப்போது சென்னைக்கு வந்து தன் குடும்பத்தை பார்த்துவிட்டு செல்கிறார் .

இதையும் படிங்க: என்னையே கேட்ட பிரபல இயக்குனர் அந்த நடிகையுடன் படுக்கையில் ஓவர் டோஸில் இறந்தார்… நடிகை ஷாக்

அஜித் படங்களை பொருத்தவரைக்கும் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடப்பதே இல்லை. வெளிநாடுகளில் தான் நடக்கிறது. அதைத்தான் அஜித்தும் விரும்புகிறார். இங்கு ஃபேன்ஸ் தொல்லைகள் அதிகமாக இருப்பதினால் சுதந்திரமாக படப்பிடிப்பை நடத்த முடியாது என்ற காரணத்தினால் தான் அஜித் படங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் நடக்கிறது .

அவரைப் பற்றி என்ன ஒரு விமர்சனம் வந்தாலும் அதை பற்றி அவர் என்றைக்குமே கவலைப்பட்டது கிடையாது. என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன். எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கிணங்க அவர் அவருடைய வழியில் சென்று கொண்டே இருக்கிறார்.

இதையும் படிங்க: மூனு வேளை சாப்பட்டுக்கே கஷ்டப்பட்ட நடிகர் திலகம்!.. ஒரு பிளாஷ் பேக்!…

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் சுவாமிநாதன் அஜித்தை பற்றி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். சுவாமிநாதன் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் பெரும்பாலும் சந்தானம் படங்களில் அதிகமாக நடித்து வருபவர் .

அது மட்டுமல்லாமல் விஜய் அஜித் ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். என்னதான் பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்திருந்தாலும் அவர்களில் மிகவும் பெஸ்ட் அஜித் தான் என கூறி இருக்கிறார் சுவாமிநாதன்.

இதையும் படிங்க: அஜித் சொன்ன அந்த வார்த்தை! அதான் தல.. கௌதம் வாசுதேவ் மேனன் பெருமிதம்

ஏனென்றால் எந்த நடிகருமே அவ்வளவு சீக்கிரம் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் நெருங்கி வந்து பேச மாட்டார்கள். ஆனால் அஜித் தோள்மேல் கைய போட்டே பேசுவார். தானாக வந்து உட்கார்ந்து கூட நடிக்கும் சகா நடிகர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். இந்த பண்பை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.மிகவும் பணிவாக நடந்து கொள்வார் என்று கூறினார்.

ஒரு சமயம் எதை நினைத்து கேட்டார் என தெரியவில்லை .நிறைய நடிகர்களுடன் நடித்து இருப்பீர்கள் இல்லையா என கேட்டாராம் .அதற்கு சுவாமிநாதன் எத்தனை நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இந்த அளவு என்னிடம் யாரும் க்ளோஸ் ஆனதே கிடையாது என்று சொன்னாராம் சுவாமிநாதன் .யாராக இருந்தாலும் அஜித் உடனே அவர்களுடன் நெருங்கி பழகி விடுவார், சகஜமாக பேசுவார் என கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.