மாஸ் மாஸ்… போட்றா வெடிய… தளபதி69க்கு சூப்பர்ஹிட் வில்லன்… நடந்தா நல்லா இருக்குமே!

Published on: September 13, 2024
---Advertisement---

Thalapathy69: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாக இருக்கும் தளபதி 69 படத்தின் வில்லன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் படம் சூப்பர் ஹிட் என தற்போதை பேச தொடங்கியுள்ளனர்.

பொதுவாக ஒரு திரைப்படத்தின் வெற்றியை ஹீரோ நிர்ணயிக்கும் அளவுக்கு அப்படத்தின் வில்லன் நிர்ணயிப்பார். கொடூரமான வில்லனை காட்டினால் தான் அவரை எதிர்த்து வெல்லும் ஹீரோ இன்னும் பெரியதாக தெரிவார். அந்த டெக்னிக்கை பயன்படுத்தினால் கண்டிப்பாக அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிங்க:நடிகர்களில் தி பெஸ்ட் அஜித்தான்! யார்கிட்டயும் இல்லாத ஒரு குணம்.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்

சமீப காலமாக வெற்றி பெற்ற பேன் இந்தியா திரைப்படங்கள் இதே பார்முலாவை பயன்படுத்தி தான் ஹிட் அடித்து வருகிறது. தற்போது அப்படி ஒரு சம்பவம் தளபதி 69 திரைப்படத்திலும் நடந்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் பரபரப்பாக தொடங்கி நடந்து வருகிறது.

இப்படத்தினை தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களை தயாரித்து வந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிப்புகள் கசிந்தது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு அவர்களின் முதல் தமிழ்ப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என வீடியோவுடன் பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் விஜயின் முகத்தை காட்டவில்லை என்றாலும் அது தளபதி தான் என்பதை ரசிகர்கள் எளிதாக புரிந்து கொண்டனர். இதனால் இது தளபதி 69 படத்தின் அறிவிப்பாக தான் இருக்கும் என ரசிகர்கள் 5 மணிக்கு காத்திருக்க தொடங்கியுள்ளனர். அது மட்டும் அல்லாமல் இது விஜயின் கடைசி பட அறிவிப்பு என்பதும் ரசிகர்களுக்கு மேலும் எமோஷனலாகி இருக்கிறது.

இதையும் படிங்க: என்னையே கேட்ட பிரபல இயக்குனர் அந்த நடிகையுடன் படுக்கையில் ஓவர் டோஸில் இறந்தார்… நடிகை ஷாக்

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோலை  தளபதி 69 படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியான விஷயமாக மாறி இருக்கிறது.

Bobby deol

அனிமல் திரைப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்த பாபி தியோல் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டார். இதைத்தொடர்ந்து கங்குவா திரைப்படத்திலும் வில்லன் வேடம் ஏற்று இருக்கிறார். இந்நிலையில் தளபதி 69ல் அவர் வில்லனாக களம் இறங்குவது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

அக்டோபர் மூன்றாம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஆதித்தியா ராம் ஃபிலிம் சிட்டியில் இப்படத்திற்கான செட் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் பூஜை அக்டோபர் இரண்டாம் தேதி நடக்க இருப்பதும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: என்னை யாருமே நம்பலை… மங்காத்தாக்கு முன்னரே அஜித் செய்த பெரிய உதவி.. சர்ப்ரைஸ் சொன்ன வெங்கட் பிரபு

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.