Connect with us

Cinema News

காதெல்லாம் கூசுதே! நடுத்தெருவில் அசிங்கமாக பேசி சண்டை போடும் ஜிபி முத்து!. வெளியான வீடியோ..

டிக்டாக் ஆப் மூலம் எல்லோரிடமும் பிரபலமானவர் ஜிபி முத்து. துவக்கத்தில் டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டார். அதன்பின் பாடலுக்கு நடனமாடி வீடியோ போட்டார். ஒருகட்டத்தில் ரவுடி பேபி சூர்யா போன்ற சிலருடன் இணைந்து வீடியோ போட்டார். அதோடு, அவர்களோடு சண்டை போட்டும் வீடியோ போட்டார்.

கோபம் வந்தால் அசிங்கமாக கெட்டவார்த்தையில் பேசுவது ஜிபி முத்துவின் வழக்கம். இதை எல்லோரும் ரசிக்கவே அதை தொடர்ந்து செய்தும் வருகிறார். ‘செத்தப்பயல.. நாறப்பயலே.. பேதியில போவான்.. அறுத்துக் கிழிச்சிப்புடுவன்’.. என்பதெல்லாம் அவரின் டிரேட்மார்க் கெட்டவார்த்தைகள். டிக்டாக் ஆப்-பிற்கு தடை வந்ததும் இன்ஸ்டாகிராம், யுடியூப் பக்கம் வந்தார். இவரை எல்லோரும் காமெடி பீசாகவே பார்ப்பார்கள்.

இதையும் படிங்க: பாடகியிடம் லாக் ஆன ஜெயம் ரவி!.. குழந்தைகளையும் மறக்கிற அளவுக்கு என்னதான் நடந்தது?..

ஆனால், அதை வைத்து காசு சம்பாதித்து வீடு, கார் என செட்டில் ஆனார் ஜிபி முத்து. இவரின் ஒவ்வொரு வீடியோவும் பல ஆயிரம் வியூஸ்களை பெற்று வருகிறது. இவருக்கு பலரும் கடிதம் அனுப்புவார்கள். அதோடு, கண்டதையும் வைத்து பார்சலும் அனுப்புவார்கள். அதை என்ன என எடுத்து பிரித்து பார்ப்பதையும், கடிதங்களை படித்து பார்ப்பதையும் வீடியோவாக போட்டு கல்லா கட்டி வருகிறார் ஜிபி முத்து.

வசதியான வீடு, காஸ்ட்லி கார் என எல்லோரையும் பொறாமை பட வைத்திருக்கிறார். இதனால், குக் வித் கோமாளி போன்ற டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சில திரைப்படங்களிலும் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி வெங்கடாச்சலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இது ஜிபி முத்து குடும்பத்தினருக்கு சொந்தமான கோவில் ஆகும். இந்த கோவிலில் தூத்துக்குடியை சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார்., தமிழ் மாதத்தின் முதல் நாளில் அங்கு பூஜை நடக்கும்.

GP Muthu and letters

அப்போது ஜிபி முத்து மற்றும் மகேஷின் குடும்பத்தினர் பங்கேற்பார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை புரட்டாசி முதல் நாள் என்பதால் அங்கு பூஜை நடந்தது. அப்போது மகேஷின் குடும்பத்தினர் அங்கே வந்தனர். அப்போது, மகேஷுக்கும், ஜிபி முத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையாக மாறியது. எனவே, ‘இனிமேல் நீ இங்கே பூஜை செய்யக்கூடாது’ என மகேஷிடம் சொல்லி இருக்கிறார் ஜிபி முத்து

இதைத்தொடர்ந்து மகேஷ் குடும்பமும் ஜிபி முத்து குடும்பமும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த ஜிபி முத்து மகேஷை மிகவும் தரக்குறைவான மற்றும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரஜினி படத்துல ஓபனிங் சாங்… கமல் பாடுவதற்கு வாய்ப்பு?

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top