Connect with us

Cinema News

கைது செய்யப்பட்ட விஜய் பட பிரபலம்… தொடங்கியது வேட்டை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Jani:சினிமா துறையில் கடந்த சில வாரங்களாகவே நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த அட்ஜஸ்ட்மென்ட் விவாகரங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். அதிலும் சிலர் காவல் நிலையம் ஏறி புகார் கொடுக்கவும் துணிந்து விட்டனர்.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் ஜானி மாஸ்டர். அதிலும் சமீபத்தில் தமிழில் ஹிட்டு அடித்த அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலாய்யா, மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களுக்கு கூறுகிறார் ஜானி மாஸ்டர் தான். இதில் திருச்சிற்றம்பலத்திற்கு சமீபத்தில் தேசிய விருது வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவாவில் பாடகியுடன் மூணு மாசமா இருந்த ஜெயம் ரவி… என்ன காரணம்னு தெரியுதா?

இப்படி புகழின் உச்சியில் இருக்கும் ஜானி மீது துணை நடன கலைஞரான பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் தற்போது 21 வயதாகும்  எனக்கு கடந்த 2019ஆண்டு ஹைதராபாத், சென்னை, மும்பை படப்பிடிப்பில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

Jaani

 

இதற்கு ஜானி மனைவியும் உடந்தை எனப் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து ஜானி மீது ஆந்திர காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடன இயக்குனர் சங்கத்திலிருந்து ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை திரைப்படங்களில் பணியாற்ற தெலுங்கானா பிலிம் சேம்பர் இடைக்கால தடை போட்டது.

இதையும் படிங்க:  மணிமேகலை சொல்றது உண்மைதான்… சக ஆங்கர் ரக்‌ஷன் சொல்வது என்ன?

இதை அடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் தற்போது ஜானி கைது செய்யப்பட்டிருக்கிறார். சைத்ரபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று மாலை ஹைதராபாத் அழைத்து செல்லப்படுவார் எனக் கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top